பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

115


டாக்டர் பால் எர்லிக் குடும்பம், நோய்க் கிருமிகளை அழிக்கும் சால்வர்சானைக் கண்டுபிடிக்க அனுபவித்த ஒவ்வொரு வேதனைச் சம்பவங்களும் கண்ணீர்க் காவியமாகவே திகழ்ந்தன.

டாக்டர் பால் எர்லிக், மனித சமுதாயத்திற்கு மாபெரும் இரசாயனக் கொடையை வழங்கினார்! அதன் பெயர் சால்வர்சான் என்பதாகும்.

எந்த மனிதனுடைய உடலில் எப்படிப்பட்ட நோய்க் கிருமிகள், எத்தகைய நோயை உருவாக்கினாலும்,. அவற்றை ஒர் ஊசியைப்போட்டே அழித்துவிடலாம் என்ற இரசாயன மருந்தை, மருத்துவ கலைக்கு வழங்கிய அந்த மாமேதையை, இன்றும் மனித இனம் வாழ்த்தியபடியே உள்ளது.

நோய்க் கிருமிகளை ஒழிக்க யாரொருவன் வாழ்நாள் தோறும் தனது உடலிலே ஊசியை ஏற்றிக் கொள்கிறானோ, அவன் டாக்டர் பால் எர்லிக்கை மறக்காமல் நினைக்கிறான் என்ற சிந்தனையை உருவாக்கி விட்டார் பால் எர்லிக்!

அந்த மாமேதை வடித்த கண்ணீர்! அனுபவித்த வேதனைகள்: சந்தித்த சோதனைகள்! சமுதாயம் வீசிய இழிச் சொற்கள்! பசி, பட்டினிகளடங்கிய வறுமையின் கோரக் கொடுமைகள்! அத்தனையும் அவரது அறிவியல் வெற்றிக்குப் போட்ட உரங்களாகி விட்டன!

அதனால்தான், அந்த மாமேதையால் மனிதகுலம் வாழ்வதற்கான அற்புத இரசாயனபொருளைக் கண்டுபிடித்த, நமக்கெல்லாம் உயிர்ப்பிச்சையைப் போட முடிந்தது! வாழ்க டாக்டர் பால் எர்லிக்.