பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

123


இந்த இரு எதிர்ப்புகளுக்கு அஞ்சிய கேலென் விலங்குகளை அறுத்துப் பார்க்கும் முறைகளைப் பின்பற்றினார்.

அவருக்குப்பிறகு 1300 ஆண்டுகள் உருண்டோடிய பின்பும், குறிப்பாக வெசேலியஸ் காலத்திலும்கூட மனித உடலை அறுத்துப் பார்ப்பதற்கு அரசாங்க எதிர்ப்பும், மதக் கட்டுப்பாடும் இருந்து வந்தன.

இதை அவர் நன்கு உணர்ந்திருந்தார் என்றாலும் மனித உடலை அறுத்துப் பார்த்து-அந்த பரிசோதனை வாயிலாகக் காணும் முடிவே உண்மையானது- உறுதியானது என்று வெசேலியஸ் திடமாக நம்பினார்.

எங்கே போவார் மனித உடலை அறுத்துப் பார்க்க! எனவே, என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தார். திணறினார்!

அந்தக் காலத்தில் பிணத்திருட்டு என்ற ஒரு தீய வழக்கம் மக்களிடையே இருந்தது. சவக்குழிகளிலே உள்ள பிணங்களை இரவோடு இரவாகத் தோண்டி எடுப்பார்கள். அதைக் கொண்டு போய் பிறருக்கு விற்று விடுவார்கள்.இந்தப் பிரச்சினை ஆராய்ச்சியை ஈர்த்தது.அதனால், மனித உடலை அறுத்துப் பார்த்து சோதனை செய்யும்போது, அவருக்கு உதவியாக் வேறு எவரையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற முடிவுக்கு வந்தார்.

ஒரு நாள் அவர் சிறைச் சாலையின் ஒரமாக நடந்து சென்றார். அங்கே மனித உடலின் எலும்புக்கூடு ஒன்று முழு உடலைப் போலவே உலர்ந்து கிடந்ததைக் கண்டார்.