பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


அந்த எலும்புக் கூட்டை எடுத்து வருமாறு தனது நண்பன் ஒருவனைக் கேட்டுக் கொண்டார். அவர் அதை மறுநாள் கொண்டுவந்து வெசேலியசிடம் சேர்த்தார்.

ஆராய்ச்சி வேட்கையிலே திளைத்துக் கிடந்த அவர், அந்த எலும்புக் கூட்டைக் கண்டு பேரானந்தம் கொண்டு அதனை அவர் ஆராய்ச்சி செய்து சில உண்மைகளை உணர்ந்தார்.

எலும்புக் கூட்டைப் பரிசோதித்த பின்பு அவருக்கு உண்மையான மனித உடலையும் அறுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகரித்து விட்டது.

இரவு நேரங்களில் தன்னந்தனியாக - சிறைச்சாலை ஒரமாக அடிக்கடி போவார்.

மரண தண்டனைப் பெற்று புதைக்கப்பட்ட பிணங்களைத் தோண்டி எடுத்து தோள் மீது தூக்கி வருவார்.

எவருக்கும் தெரியாமல் ஒத்தையடி பாதை ஒரமாக தன்னந்தனியே அவர் வருவதைப் பார்த்தால் பேய் பிணம் தூக்கிச் செல்கிறது என்று அலறி ஒடி விடுவார்களாம்.

அவ்வளவு அரும்பாடுபட்டு அந்தப் பிணங்களைத் தோண்டி எடுத்துச் சென்று இரவோடு இரவாக யாருக்கும்கூட தெரியாமல் அறுத்து அறுத்துப் பார்த்துச் சோதனைகளைச் செய்தார்.

பொழுது விடிவதற்குள் தனது சோதனையை முடித்துக் கொண்டு மீண்டும் அந்த உடற் கழிவுகளை எடுத்துப் போய் யாருக்கும் தெரியாமல் வேறொரு