பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

125


புதைக்குழி தோண்டி புதைத்து விடுவாராம்.

இத்தகைய சோதனைகளை அவர் பல முறை செய்து பல உண்மைகளைக் கண்டறிந்து, அதை அவ்வப்போது குறிப்பு எழுதியபடியே இருந்தார்.

மருத்துவத் துறையில் உடற்கூற்று அமைப்பியலை எவ்வளவு முக்கியமாக அவர் கருதியதால், இவ்வளவு அரும்பாடுபட்டு இதுபோன்ற சோதனையிலே ஈடுபட்டிருப்பார் என்பதை, இன்றும் நாம் நினைக்கும் போது நெஞ்சு பதறுகிறது.

ஆம்! வெசேலியஸ் பிணம் தூக்கித் திரிந்த பேயாக இரவிலே நடமாடி, உடற்கூற்று மருத்துவத்தை இன்னும் வாழ வைத்துள்ள மாமேதையாக வாழ்கின்றார்.

அந்த அரும் பெரும் மருத்துவக் கலைஞன் ஏன் இவ்வாறு பாடுபட்டார்? எதற்காக தன் உயிரையும் மதிக்காமல் தனியாளாக இந்த பயங்கர ஆராய்ச்சியிலே ஈடுபட்டார் என்பதை நினைத்துப் பார்ப்பவர்களுக்கு, அவரது உண்மையான அறிவின் பெருமையை மனிதக் குலம் மீது அவருக்கு இருந்த ஆசையை-ஆர்வத்தை மக்கள் உணர்வார்கள்.

மதவெறியிலே மக்கள் மூழ்கி இருந்த காலம் வெசேலியஸ் காலம்.மூடநம்பிக்கைகள் என்ற முடை நாற்றப் படுகுழியிலே மக்கள் மனமாற மூழ்கி சொறி, சிரங்கு, படை, தேம்பல் போன்ற தோல் விகாரப் பிணிகளை ஏற்று அழகுத் தோல்களாக அவற்றை நம்பி இருந்த காலம்.

ஒரு மேதை செய்த ஆராய்ச்சியிலே உள்ள குறைகளை எந்த மனித சமுதாயத்திற்காக அவர்