பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 ⃞

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


செய்தாரோ, அதே மனித சமுதாய முன்னேற்றத்திற்காக மேதை அக்குறைகளைச் சுட்டிக் காட்டினால் அவர்கள் கூறுவது சரியா தவறா என்பதைச் சிந்தித்து உணராமல் குற்றங்களைக் கூறியவனையே தண்டிக்கச் கச்சைக் கட்டிய மக்கள் வாழ்ந்த காலம்.

அப்படிப்பட்ட காலத்தில் மனித உடலை அறுத்து ஆய்வு நடத்துவதற்கு இப்போதுள்ள அரசுச் சட்டமோ, உதவியோ, சமுதாயச் சம்மதமோ அப்போது இல்லாத காலம்.

அதனால் தான், வெசேலியஸ் இரவோடு இரவாக பிணங்களைத் தேடி அலைந்தார். தோண்டித் தூக்கினார். சவத்தைத் தன் தோள்மீது! நடந்தார் சுமந்து! ஒற்றையடி பாதை ஒரமாக திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே!

யாராவது பார்த்து விட்டால் அரசாங்கச் சட்டமும் - மதக் கோட்பாடும் தன்னைப் பலி கொண்டு விடுமோ - யாராவது காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்ற பயத்தோடு நடந்தே சென்றார்.

எவரும் அறியாத இடத்திற்கு எடுத்துச் சென்று அறுத்தார். பிணத்தை சோதனை செய்து ஆராய்ந்தார் மனித உடலின் மர்மங்களை அந்தக் குறிப்புகளை அப்போதே எழுதிக் கொண்டார். மீண்டும் கொண்டு போய் புதைகுழிதோண்டிப் புதைத்து விடுவார்.அந்த பிணத்தின் நாற்றக் கழிவுப் பொருட்களை.

கள்ளத்தனமாக இவ்வாறு பல பிணங்களை அறுத்துப் பார்த்தார்-யாருக்காக? தனக்காகவா? இல்லை, இந்த உலக சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக!