பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


கியூரியின் தந்தையார் விஞ்ஞானத்தைப் போதிக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். தாயார் பியானோ வாசிக்கும் இசைப் புலமை பெற்றவள். கியூரியோ நடனத்தில் மயிலாக நர்த்தனமாடிய வித்தகி!

இரசியா ஆதிக்கம் செலுத்திய ஜார் மன்னனது ஆட்சியிலே, அப்போது போலந்து நாடு அடங்கித் தவித்தது.

போலந்து நாட்டுக்குச் சுதந்திரம் தேவை என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்ததற்காக கியூரியின் தந்தையார் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களிலே ஒருவரானார்.

கியூரி குடும்பம் வறுமையிலே குலைந்தது! உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த அவளுக்கு மேற்படிப்புக்கு போக போதிய பொருளாதார வசதியில்லை.

இதற்கிடையே அவளது தமக்கை ஒருத்தியும் கல்வி கற்றாக வேண்டும். இந் நிலையில் என்ன செய்வாள் அவள்?

அதனால்தான், கியூரி, ஒரு பிரபுவின் வீட்டிலே பணிப் பெண்ணாகப் பணிபுரியும் பரிதாப நிலையைப் பெற்றாள்! அப்போதுதான், அவள் பணக்காரர் காதலில் ஏழ்மைத் தோல்வியைக் கண்டாள்!

காதலிலே தோல்வியுற்ற கன்னி, மனம் தளராமல் ஆசிரியையாக சில மாதங்கள் கழித்தாள்! அதனால், வந்த ஊதியத்தை தனது தமக்கைக்கு அனுப்பி வந்தாள்.