பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


விளையாடல்களையும் மறந்து, இனிமையான சுக போகங்களைத் துறந்து, அறிவியல் சோதனைகளை நடத்தி வந்தார்கள்.

பேராசிரியர் பெக்கரல், தனது விஞ்ஞான ஆய்வில் ஏற்பட்ட சில சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ள மேரி தம்பதிகளை நாடி, ஆலோசனை செய்தார்.

அன்று முதல் மேரி தம்பதிகள், பெக்கரல் செய்து வந்த ஆய்வையே ஆழ்ந்து செய்து வரலானார்கள்.

‘பிட்சு-பிலெண்ட்’ என்பது, விலை உயர்ந்த பொருள். குதிரை லாயத்தையே பரிசோதனை நிலையமாக நடத்தும் மேரி தம்பதிகளுக்கு, அந்த தாதுப் பொருளை வாங்கிடப் பணம் ஏது?

அதனால், ஆஸ்திரிய அரசாங்கத்திடம் தங்களது ஆராய்ச்சியை விளக்கி, மேரி தம்பதிகள் தமக்கு அந்த கனிமப் பொருளைத் தந்து உதவுமாறு கேட்டனர்.

ஆஸ்திரிய அரசு, விஞ்ஞானிகள் வேண்டுகோளை ஏற்று ஒரு டன் பீட்ச்-பிலெண்ட் தாதுப் பொருள் மண்ணை அனுப்பி வைத்தது.

அந்த மண்ணைக் கூட வாங்கிக் குவித்து வைத்திட அவர்களிடம் தகுந்த இடமில்லை! பாவம்! மழை பெய்தால் ஒழுகக் கூடியதும், மரத்தாலானதுமான ஒரு சாதாரண கொட்டகையிலே அவர்கள் அந்த மண்ணைக் கொட்டி வைத்தார்கள்.

கணவனும் - மனைவியுமாகச் சேர்ந்து, அந்த மண்ணைக் கொதிக்க வைத்துத் தூய்மைப் படுத்தினார்கள்.