பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு




பாதரசத்தின் மீது செந்நிறப் பொடி, முன்பை விட அதிகமாகக் காணப்படுவது மட்டும் நின்று போய் விட்டது. சாடியின் உள்ளே இருந்து காற்று குறைந்து போவதும் நின்று போய்விட்டது.

இலவாஸ்யே, தனது ஆராய்ச்சியை ஆரம் பிக்கும்போது அந்தப் பாத்திரம், அதனோடு இணைந்த குழாய், சாடி ஆகிய அனைத்திலும் ஐம்பது கன அங்குல அளவுள்ள காற்றே இருந்தது.

பாதரசத்தை மேலும் சூடேறச் செய்வதை நிறுத்தியபோது, அதனுள்ளே நாற்பது கன அங்குல அளவுள்ள காற்றே இருந்தது.

பாதரசத்தினுள்ளே அமைந்திருந்த செந்நிறப் பொடியை எடுத்து, மீண்டும் அதையே சூடேற்றினார். இலவாஸ்யே!

அப்போது அதிலே இருந்து காற்று வெளியே வருவதை கண்டார். அதை ஒரு கண்ணாடிச் சாடியினுள்ளே அடைத்துப் பிடித்தார்.

காற்றில் ஐந்தில் ஒரு பங்கான பகுதி, பாதரசத் தோடுசேர்ந்து செந்நிறப் பொடியை அமைக்கின்றது.

இந்த வாயுவைத்தான் உலகப் புகழ்பெற்ற அறிவியல் மேதையான ஜோசப்ஃ ப்ரீஸ்ட்டிலி என்பவர், குறையிலா வாயு என்ற பெயரைச் சூட்டி ஆராய்ச்சி செய்தார் என்பதை லவாஸ்யே திட்ட வட்டமாக உணர்ந்தார்.

ஜோசப் ஃப்ரீஸ்ட்டிலி வைத்த அந்த பெயரை மாற்றி, தமது ஆராய்ச்சியை உறுதிப்படுத்தி, அதற்கான காரண காரிய விளக்கங்களை எழுதி, ஆக்சிஜன் என்ற பெயரை இலவாஸ்யே சூட்டினார்.