பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

25


களாகும். இந்த இரண்டு சொற்களை இணைத்தே அந்தப் பெயரை அந்தக் காற்றுக்கு வைத்தார்.

ஐட்ரஜன் என்ற அந்தப் பெயரைத்தான், இன்றும் விஞ்ஞான உலகம் அழைத்து, அக்காற்றைப் பெருமைப்படுத்தி வருகிறது.

இலவாஸ்யே, வெடிமருந்து தயாரிக்கும் ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டார். பிரெஞ்சு நாடு அதனால் பெரும் பணத்தையும், போர்த் தளவாடங்களையும் பெருக்கிக் கொண்டது.

ஜனநாயகத் தத்துவத்திலே லவாஸ்யே அசைக்க முடியாத நம்பிக்கையும், பற்றும் கொண்டிருந்தார்.

மக்கள் குரலே மகேசன் குரல் என்பதைப் புரிந்து, அவ்வப்பொழுது பொதுமக்கட்குரிய சேவைகளையும் செய்து வந்தார்.

அதனால், அவர் ஆர்லியான்ஸ் மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

மக்களது மகிழ்ச்சி என்பது ஒரு சிறு பகுதியினருக்கு மட்டும் உரிமையானதாக இருக்கக் கூடாது. அது பரவலாக அனைவருக்கும் பொதுவுடைமையாக இருக்க வேண்டும்.

எல்லா மக்களும், தனித்தனி சுதந்திர உரிமையோடு வாழ உரிமை உண்டு என்பதை அவர் தனது நாடாளுமன்றக் கோட்பாடாகக் கொண்டு பணியாற்றினார்.