பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு




இலவாஸ்யே வாழ்ந்த காலத்தில், பிரான்ஸ் நாட்டில் ஷான் போல் மாரா என்ற ஒரு போர்ப் படைத் தலைவன் இருந்தான். அவன் பிரெஞ்சுப் புரட்சித் தோன்றியதற்குப் பிறகு, பிரான்ஸ் நாட்டி லமைந்த கொடுங்கோல் ஆட்சித் தலைவர்களிலேஒருவனானான்.

அவன், பிரெஞ்சு விஞ்ஞானக் கலைக் கழகத்தின் ஒப்புதலுக்காக, ஒர் இராசாயன நூல் ஒன்றை எழுதிப் புரட்சிக்கு முன்பு அனுப்பி வைத்திருந்தான்.

அந்த நேரத்திலே லவாஸ்யே அக்கலைக் கழகத்தின் உறுப்பினர்களிலே ஒருவராக இருந்து புகழோடு வாழ்ந்து வந்தார்.

அந்த போர்ப்படைத் தலைவன் அனுப்பிய விஞ்ஞான புத்தகத்தைப் படித்து, அதிலே கூறப் பட்டுள்ள விவரங்கள் எல்லாம் சரிதானா? ஏற்கப் படக் கூடியவைதானா? என்று ஆய்வு நடத்தும் பொறுப்பை, அந்த கலைக்கழகம் இலவாஸ்யேவிடம் ஒபட்டைத்தது.

உண்மையைக் கூறியே பழக்கப்பட்டுப் போன அந்த விஞ்ஞானப் புலவன், எதையும் ஒளிக்காமல், உள்ளதை உள்ளபடியே உணர்ந்து, "மாரா நூல் ஏற்கப்படக் கூடியதன்று” என்று கூறி அதைத் திருப்பி அனுப்பி விட்டார்.

பிரான்ஸ் நாட்டிலே இலவாஸ்யே முன்பொருமுறை நிலவரி வசூலிக்கும் பெரிய அதிகாரியாகப் பணியாற்றினார் அல்லவா?