பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


பேரறிஞரிடம், ஆர்க்கிமிடீஸ் கணித இயலைப் பற்றி கல்வியைப் பழுதறப் படித்தார்.

தத்துவ ஞானத்தையும் - கணிதத்தையும் ஆர்க்கி மிடீஸ் ஐயந்திரிபறக் கற்று மாமேதையாகச் சிறந்தார். அதற்காகத் தனது வாழ்நாளையே செலவிட்டார் என்றால் மிகையாகாது.

ஆர்க்கிமிடீஸ் காலத்தில் யாராவது உடல் வருந்தி உழைத்தால், அதற்கு மக்களிடையே மரியாதையோ மதிப்போ கிடையாது.அதற்குப் பதிலாகக் கேலியும் கிண்டலும்தான் பரிசாகக் கிடைக்கும். அப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்த காலம் அது.

இத்தகையப் பண்புகளைக் கொண்ட மக்களிடையே, அவர், அல்லும் பகலும் விஞ்ஞானப் பரிசோதனை யிலேயே மூழ்கிக் கிடந்தால் என்ன நினைப்பார்கள் அவர்கள்?

ஆர்க்கிமிடீஸ் அடர்த்தி எண் என்ற கணிதத் தத்துவத்தைக் கண்டுபிடித்துக் கூறிய பின்பு, அவரையும் அவரது தத்துவத்தையும் நையாண்டிச் செய்யும் நிகழ்ச்சி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பெருகிக் கொண்டே வளர்ந்தது!

அவரது விஞ்ஞானச் சாதனையை அற்பத்தனமாக எண்ணி நகையாடியது மட்டுமல்ல, அவர் ஏதோ உளறுகிறார், பைத்தியம் அதிகமாகிவிட்டது. என்றெல்லாம் கூட்டங்கூட்டி சிலர் ஆங்காங்கே பேசலானார்கள்.

இந்த கேலியும் கிண்டலையும் கண்டு ஆர்க்கிமி-