பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



1.தலையை இழந்த விஞ்ஞானி!

றிவையும், இயற்கையையும், உண்மையையும் நோக்கி, மனித இனம் இன்று பயணம் புரிந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம்.

அவனியின் முன்னேற்றத்திற்கு வழி காட்டிகளாகத் திகழ்கின்ற இந்தச் சுட்டுப் பெயர்கள், மானிட சமுதாயம் வாழ்வதற்கு எண்ணற்ற அற்புதங்களை வழங்கியவாறே சுழன்று கொண்டிருக்கின்றன.

விந்தை மிகு இந்த அற்புத அறிவுப் பயணத்தை மனித இனம் நிறுத்தி விட்டால், அதன் இதயத் துடிப்பே நின்று விட்டதாகப் பொருளாகும்.

என்று தோன்றியதோ மனித இனம், அன்றி லிருந்து இன்றுவரை அது இயற்கைச் சக்திகளோடு ஒன்றி, நீண்ட நெடும் பயணம் செய்தபடியே போராடி வருவதைக் காண்கின்றோம்.

ஆதி மனிதன், காட்டிலும் மேட்டிலும் வாழ்ந்து மிருகங்களைப் போல அலைந்து திரிந்து, நாளாக வாக நாகரிகத்தின் சின்னமாய் நடமாடினான்.

மலைச் சரிவுகளிலும்-மரப் பொந்துகளிலும் வாழ்ந்து மடிந்து வந்த மனிதன், தன்னைப் பாது காத்துக் கொள்ளவே இயற்கைச் சக்திகளோடுப் போராடினான்.

அந்தப் போராட்டங்களின் விளைவுதான், மாந்தரினம் இன்றுவரைப் பெற்றுள்ள விஞ்ஞானக்