பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


ஆர்க்கிமிடீஸ் அறிவியலின் அற்புத ஞானி! விஞ்ஞான விதிகளை உருவாக்கிய வித்தகன்! பேராற்றல் வாய்ந்த வானவியல் பேரறிஞன், கணித உலகுக்குக் கிடைத்த பேராசான்!

ஒரே ஒரு தனிமனிதன், ஒப்பற்ற மேதை, மாபெரும் படைக்கு ஒப்பான அவரது விஞ்ஞான ஆற்றலுக்குக் கிடைத்த பரிசு, என்ன தெரியுமா?

வாள் ஒன்று அவரது தலையை வெட்டி வீழ்த்திய சோக வரலாறுதான். அறிவுச் சூரியனை அறியாமை மேகங்கள் மறைத்துவிட்டன. எங்கே? கல்லறைக்குள்!

ஆனால், ஆர்க்கிமிடீஸ் விதைத்த அறிவியல் விதைகள், இன்றும் விஞ்ஞான உலகத்திலே அரிய செல்வக் குவியல்களைக் குவித்துக் கொண்டே இருக்கின்றன !

அறிவியல், ஞான சூரியனாக நடமாடிய அவரது விஞ்ஞான விதிகள், இன்றும் விஞ்ஞான உலகில் தனது ஒளிக் கதிர்களை வீசியபடியே உள்ளன.

வாழ்க ஆர்க்கிமிடீஸ் தத்துவங்கள்!