உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


கோப்பர்னிக்கஸ் என்ற அறிவியல் மேதையும், தனது ஆராய்ச்சியால் உறுதிப்படுத்திப் புதுமைகள் பலவற்றைச் செய்து காட்டினார்.

இவ்வாறு, பித்தாகரஸ் கண்டறிந்த வானியல் உண்மை, அவருக்குப் பின்னால் வந்த அரிஸ்ட்டார்க்ககஸ் , சீனான், யூக்லிட், ஆர்க்கிமிடீஸ், கோப்பர்னிக்கஸ் ஆகியோர் ஆராயுமளவுக்கு வானியல் விஞ்ஞானத்திற்கு அடிப்படையாக அமைந்தது. அவரது அறிவியல் தீர்க்க தரிசனத்திற்கு சிறந்த ஒர் எடுத்துக்காட்டே ஆகும்.

உலகம் தோன்றியது முதல் இன்று வரையுள்ள எல்லா விஞ்ஞானிகளும் அவரவர்களின் ஆராய்ச்சிகளோடும் கண்டு பிடிப்புகளோடும், தங்களது வாழ்நாளை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவரவர் வாழ்ந்த காலக் கட்டங்களில் சோதனைகளையும் - வேதனைகளையும் - மகிழ்ச்சியையும் - மனநிறைவையும் ஏற்று வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

அவர்களுக்குப் பின்னால் அந்தந்த அறிவியல் மேதைகள் கண்டுபிடித்த அற்புதங்களின் வரலாற்றை எடுத்து மக்களுக்குக் கூற, அவர்கள் வாரிசுகளை யாரும் ஏற்படுத்தியதாக வரலாறு இல்லை.

அறிவியல் ஆராய்ச்சிகள் பல புரிந்து அற்புத வெற்றிகள் பல குவித்த, விஞ்ஞானச் சிந்தனையாளர்கள் எல்லாம், அவரவரது அறிவுத் திறமைக்கான அடையாளமாகத் தத்தமது கண்டுபிடிப்புகளை மட்டுமே உலகில் நிலை நிறுத்தி விட்டுச் சென்றனர்.