பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


 அத்தகைய அறிவியக்கத்தை, அவர் ஆங்காங்கே உருவாக்கியதால்தான், பித்தாகரசின் அறிவுச் செல்வங்களை எல்லாம் இன்று உலகம் அனுபவித்து இனிய வாழ்வு வாழ்ந்து வருகின்றது.

இதுபோன்ற அறிவியக்கத்தை இவருக்குப் பின்னே வந்த அறிவியல் அறிஞர் எவரும் ஆரம்பிக்காததால் தான், மற்ற மேதைகளைப் பற்றிய சிந்தனை வளத்தை மக்களால் முழுமையாக அறிய முடியவில்லை.

பித்தாகரஸ், அந்த அறிவியக்க மன்றங்களில் பேசிய பேச்சுக்கள் எல்லாம், ஒரு சிலரிடையே எதிர்ப்பைக் குவித்தாலும், வேறு சிலரிடையே அறிவுப் புரட்சியை உருவாக்கின.

ஆன்மாவைப் பற்றி அவர் ஆராய்ந்து கூறிய கருத்துக்கள், மக்களிடையே ஊர் அதிருப்தியை வளர்த்துக் கொண்டே வந்தன.

"ஆன்மா இறவாதது. மீண்டும் மீண்டும் அது வெவ்வேறு மக்களின் உடலில் புகுந்து பூமியை வந்து அடைந்து கொண்டே இருக்கிறது” என்றார். பித்தாகரஸ்.

இந்த கருத்து பித்தாகரசுக்குப் பெரும் பகையைத் தேடித் தந்தது.

"விலங்குகளும் - மக்களும் - உறவினர்கள். மனித ஆன்மா ஒர் உடலில் புகுந்து விலங்காகப் பிறக்கலாம்" என்று, அவர் மக்களிடையே பகிரங்கமாகக் கூற ஆரம்பித்தார்.

இந்த கருத்தும் அவருக்கு எதிர்ப்பு நெருப்பாய் மூண்டது. மக்கள் அதை அணைக்க பெரும் முயற்சியிலே ஈடுபட்டார்கள்.