பக்கம்:விடிவெள்ளி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிககண்ணன் .ெ ! நாட்டின் சீர்கேடோ, நாட்டு மக்களின் துயர திலையோ அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு எப் போதும் குடி, விருத்து; எந்நேரமும் கூத்தாட்டம்: விரும்பியபோதெல்லாம் மங்கையர் தரும் இன்பம்தான். போருள் தேவைப்படும்போது நாட்டினரிடம் கேட்டுப் @ 巫拉 -- பெறுவதில்லை அவர்கள். ஆட்களையனுப்பிக் கொள்ளை யடித்துத் தங்கள் நிதி நிலைமையை உயர்த்திக் கொள்ள: தில் தான் அவர்கள் ஆர்வம் காட்டினார்கள். அன்று கூற்றன் நாயனார் மாளிகையில் ஏதோ விசேஷ் தினம். செல்வமும், செல்வாக்கும் இருக்கும்போது விருந் தும், விசேஷமும் கொண்டாடத் தனியான காரண மூலம் வேண்டுமோ? வேன் டியவர்கள் பலரும் ஒன்று கூடி உல்லாசமாகக் குடித்து ஆனந்தமாகப் பொழுதுபோக்கும் எண்ணம் ஏற்பட்டாலே போதுமே இருப்பினும் அன்று அவர்கள் ஒன்று கூடுவதற்கு முக்கியமான காரணமும் உண்டு. தலைநகரிலிருந்து வீரன் உக்கிரகாதன் வந்திருந்தான். அவனே களப்பிரர் படையின் சேனாபதி அல்லவாயினும், படையினரிடையே அவனுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. 妙 交 * - • * - ふ هم தளபதி ஜெயகீர்த்திக்கு அடுத்த ஸ்தானத்திலிருந்த அவன் எந்நேரத்திலும் படைத் தலைமையைக் கைப்பற்றிக் கொள்ளக் கூடும் என்று கூற்றன் நாயனார் கருதினான். அவனுக்கு உதவி செய்வதன் மூலம் தனது நலன்களைப் பேருக்கிக் கொள்ள வேண்டும் என்ற கள்ளக் கருத்து கூற்றின் உள்ளத்தின் ஒரு மூலையில் பம்மியிருந்தது. னோடு அவன் நண்பன் ஷான்யேஸ் என்கிற உக்ர்ேநாத் யவனனும் வத்திருந்தான். தனது சோம்பலுக்கும் உல்லாச மனோபாவத்துக்கும் ஏற்ற சில தத்துவங்களை வகைப் படுத்திக் கொண்டு ஞானி' என்ற பெயரை எளிதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/12&oldid=905880" இலிருந்து மீள்விக்கப்பட்டது