பக்கம்:விடிவெள்ளி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 விடிவெள்ளி அவன் எழுந்து நின்று சோம்பல் முறித்துவிட்டுச் சான த்தின் வழியே வெளியே நோக்கியபடி நின்றான் ஒரு தட் டிலிருந்த பழங்களில் ஒன்றை எடுத்துக் கடித்துச் கவைத்தான். பிறகு உடையைச் சரிப்படுத்திக்கொண்டு கதவைத் திறப்பதற்காகச் சென்றான். அவனது கை எவ் வளவு இழுத்து முயன்ற போதிலும் கதவும் திறந்து கொள்வதாயில்லை * அவன் தட்டினான், இடித்தான், வலுவோடு இழுத் தான் ஈ.சுங்!-அடைபட்ட கதவு அடைத்தபடியே கிடந்தது தவறுதலாக உட்புறத் தாழ்ப்பாள் எதுவும் விழுந்து தடையாக முரண்டிக் கிடக்கும் என்பதற்கில்லை. அல்ன் கண்கள் பலமுறை இதை உறுதிப்படுத்தி விட்டன. அவன் தன் முழு பலத்தோடு கதவை உலுக்கினால் வலு மிக்க இரட்டைக் கதவு அது கதவின் இரு பகுதிகளையும் குலுக்கி இழுத்தான். X உண்மை உறைத்தது. சூடாக இதயத்தைத் தாக்கி பது ஆமாம். கதவு வெளியே பலமாகப் பூட்டப்பட் டிருத்தது. அப்படியென்றால்? இதன் அர்த்தம் தான் என்ன? நல்லவர் போல் நடித்த மாறன்காரி நயவஞ்சகன் தான நம்பிக்கைத் துரோகிதானா? விருந்தாளி என்று தன்னைச் சிறைபடுத்துவதுதான் அவர் உபசரித்துத் - - o * நோக்கமோ? அதே தான்! அவரை நம்புவதற்கில்லை என்று உள்ள குதுகுறுத்தது உண்மையாகிவிட்டதே! என்று பதைபதைத்தான வழுதி. கதவுடன் போராடிப் பயனில்லை; கூச்சலிட்டும் பயனில்லை என்று அறிந்து கொண்டதும், அவன் மனம் லெ தும்பியவனாய், உணர்வுக் கொதிப்புற்றவனாய், அப்படியே உட்கார்ந்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/137&oldid=905917" இலிருந்து மீள்விக்கப்பட்டது