பக்கம்:விடிவெள்ளி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக் கண்ணன் 0 13? 3. பந்துடன் வந்த சுந்தரி மாலை வேளையின் ஒளி மிகுந்து வெயிலால் விண்ணும் மண்ணும் தனி எழிலோடு மினுமினுத்தன. வானத்து நிலமும்,மரங்களின் பசுமையும். மலர்க்கூட்டங் களின் வேறுபட்ட நிதங்களும் பளிச்சென இலங்சி, தனித் தனியாகவும் வர்ணத் தொகுப்புகளாகவும் கண்களைக் கவர்ந்தன. நிறைந்த விருந்தாக விளங்கிய அவை உள்ளத்திற்கும் உவகை தரும் தன்மை பெற்றிருந்தன. எனினும் கொதிப்புற்ற உணர்வோடும் குமைந்து குமுறும் உள்ளத்தோடும் அறைக்குள் அடைப்பட்டுக் கிடந்த இளம்வழுதிக்கு அந்தக்காட்சிகள் இனிமையாகவு மில்லை மனசுக்கு மகிழ்வு அளிப்பனவாகவும் இல்லை! நரித்தனம் பெற்றிருந்த மாறன் காரியைப் பழி வாங்க வேண்டும் என்று கொதித்தது அவன் உள்ளம். அதற்கு முந்தி அந்த அறையிலிருந்து வெளியேற வேண்டும்; அது தான் உடனடியாகச்செய்யவேண்டியது என்ற எண்ணமும் தலையெடுத்தே நின்றது. ஆனால் அவனுக்கு வழி தான் புலனாகவில்லை; மனசு ஆராய்ந்தது. - இந்த மாறன் காரியும் வரகுண த்தேவரின்போல் ஐவர் தான் உள்ளொன்று வைத்துப்புறம் ஒன்றுபேசி, பிறரை ஏய்த்துத் தன்னலத்தோடு செயல்புரியும் வஞ்சகர் திருக் கூட். ம் வாழ்கிறவரை எந்த நாடும் வளம் பெற்று உயர் வடையாது. இந் நாடு வீழ்ச்சியுற்றதில் வியப்பே இல்லை என்று புகைந்தது அவன் சிந்தனை. - அவனது எண்ண ஓட்டத்தைத் தடுத்து, சற்றே திடுக்கிட வைப்பதற்காகவே வந்ததுபோல் தொப்பென்று அறையினுள்ளே விழுந்தது ஒரு பந்து. சாளரத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/138&oldid=905919" இலிருந்து மீள்விக்கப்பட்டது