பக்கம்:விடிவெள்ளி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 145 யிலிருந்து புறப்பட்ட களப்பிர வீரர்கள் பலப்பல பிரிவு: களாகி, வெவ்வேறு திசைகளில் சென்று வெறிக்கூத்து ஆடிக்களித்தனர். அவர்கள் அடிப்பதித்த இடங்களில் எல்லாம் கொள்ளை யும் கொலையும் தீயும் கொடிய தெரத்து நோய் மாதிரிப் பரவின. - - சில இ. ங்களில் ஒரு சிலர் அவர்களை எதிர்த்துப் போரா. முன்வந்தனர் என்றாலும் திட்டமிட்டு அணி வகுத்து உறுதியோடு நின்று தாக்குவதற்கு அவர்களுக்குப் போதிய பயிற்சியுமில்லை. வழி காட்டுதற்குத் தகுந்து தலைவனும் இல்லை. எனவே, எதிர்த்தவர்களில் பல கொலையுண்டனர். அஞ்சியனர்கள் சிதறி ஓடினர் ! அவர்களுக்கு தேர்ந்த கதியை அறிந்த அண்டை ஊர்க் காரர்கள் எதிர்ப்புக் காட்டாமலே ஒடி ஒளிந்து கொன் வதும் இயல்பாயிற்து: கன்னெஞ்சக் களப்பிரர்கள் பசும் பயிர்கனை நாசமாக்கினார்கள். இவள்ளியையும் தங்கத்தை யும் கோள்ளையிட்டுச் சென்றார்கள். சில சில ஊர்களின் முதிய பெண்கள் தந்திரத்தைத் கையாண்டு தப்பிவிட முயன்றார்கள். அடுத்த ஊரில் வெறியர் கூட்டம் பேய: ட்டம் போடுகிறது. அது இத் திசையில் திரும்பக்கூடும் என்று தெரிந்ததுமே, ஒவ்வோரு வீட்டின் முன்னாலும் வீதியிலே பானைகளைப் போட்டு உடைத்தார்கள். தானியங்களையும் பற்பல பொருள்கனை யும் சிதறிவிட்டு, தலைவிரி கோலமாக அமர்ந்து ஒவயிட்டு அழுதுபுலம்பினார்கள் வெறியர்கள் வந்து கொள்ளை யடித்துச் சென்றுவிட்டதாக வசைபாடிக் கொண்டிருந் தார்கள். அவ்வீதிகளின் பக்கம் களப்பிரர்கள் வந்தவுடன் அங்குள்ள நிலைமையைக்கண்டதும், தங்களுக்கு முன்னரே வேறொரு கூட்டம் வந்து விளையாடி விட்டுப்போயிருப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/146&oldid=905936" இலிருந்து மீள்விக்கப்பட்டது