பக்கம்:விடிவெள்ளி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்விக்கண்ணன் 0 185 வழுதிக்கே திகைப்பூட்டும் கேள்வியாகத் தொனித்தது இது . . . வழுதியைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? என்று வினவினான் அவன். கிழவி, நான் என்ன கண்டேன்? என் மகன்தான் ந:ன்தோறும் சொல்விக் கொண்டிருக்கிறான். களப்பிரர் கல் ஒழிந்து போவார்கள்; ஒழிக்கப்பட்டு விடுவார்கள். இது உறுதி. இனம்வழுதியின் போர்படை தயாராகிறது. நானும் அதில் சேர்த்து சமர் புரிவேன் என்றெல்லாம வீரமாகப் பேசுவான்’ என்றாள். வழுதியும் சாத்தனும் உணவு உண்பதிலேயே கருத் தாக இருந்தனர். கிழவி புலம்பினாள். காலம் வரவர மிகவும் மோச மாகிக் கொண்டிருக்கிறது. உழைத்தோம்; கிடைத்ததை வைத்து உண்டோம் அமைதியாக வாழ்ந்தோம் என்பதற் கில்லையே..." - வெளியே சரக்-சரக்' என்ற ஒசை கேட்ட தி. நாய் தான் வந்துவிட்டதோ என்று திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்து பார்த்தான் சாத்தன். பகைவன் எவனோ வந்துவிட்டான் என்று வாள்மீது கை வைத்தான் வழுதி. வீட்டினுள் வந்தவன் வியப்போடு விழித்தபடி தின்று விட்டான், - o' . ‘இவன்தான் என் மகன்-வீரன் என்று உவகை யோடு அறிவித்தாள் கிழத்தாய் இவர்கள் க்ளப்பிரரின் எதிரிகள்’ என மகனிடம் கூறினாள். விடி-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/166&oldid=905979" இலிருந்து மீள்விக்கப்பட்டது