பக்கம்:விடிவெள்ளி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 விடிவெள்ளி மூட்டியிருந்த தீ, ஓங்கி எரிந்து ஒடுங்கி, ஆங்காங்கே குவிய ல் குவியலாகச் சாம்ப விட்டுக் கனன்று மினுங்கியது. ஒன்றிரு குவியல்களில் சிறுசிறு தீ தாக்குகள் தலை அக்கும். செம்மையும் நீலமும் கலந்த ஒளி காட்டிவிட்டு அடங்கும் சிறு குவியல்களில் வெம்மையால் கருகும் சுள்ளிகள் வெடித்து ஒலி எழுப்பும். களப்பிரர் சிலரின் குறட்டை ஒலியும் அவ்வப்போது மேலோங்கி நிலவும் 'துரங்குகிறவர்களைக் கொல்வது சரியா என்ற தயக்கம் இளம்வழுதியின் உன்னத்தில் எழாமலில்லை. எனி னும், போர் என்று வந்துவிட்டால் இத்தகைய மனிதத் தன்மைகளுக்கு - தயவு தாட்சணியத்துக்கு இடமே கிடையாது; இந்த நிலைமை மாறி இருத்தால் - துரங்கு கிறவர்கள் தானும் தன்னைச் சேர்ந்தவர்களுமாக இருந்து பதுங்கி, வந்து கவனித்து நிற்பவர்க்ள் களப்பிரர்களாக வும் இருப்பின் - எதிரிகள் யோசிப்பார்களா என்ன? இரக்கத்தோடு விட்டு வைப்பார்களா? இப்படியும் எண்ணம் ஓடியது அவனுக்கு. தயங்கி நிற்பானேன்? அவர்கள் விழித்துக் கொண் டால் நமக்கு வீண் சேதம் ஏற்படும்' என்றான் சாத்தன். தாக்க வேண்டியதுதானே? வீண் பொழுது போக்கு வானேன்? என்று வீரன் துரண்டினான். சீழ்க்கை ஒலிகள் எழுந்தன வழுதியும் அவன் துணை அரும் கூச்சலிட்டுப் பாய்ந்தனர். களப்பிரர்களில் சிலர் திடுக்கிட்டு விழித்தார்கள். எழுந்து உட்கார முயன் தார்கள். ஏதோ குழப்பம் நிகழ்கிறது என்று புரிந்து கொண்ட சிலர் தங்கள் வாட்களைத் தேடினார்கள், அவர்கள் செயல் புரிவதற்கு முன்னரே பகைவரின் வாட் களுக்கு இரையானார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/169&oldid=905985" இலிருந்து மீள்விக்கப்பட்டது