பக்கம்:விடிவெள்ளி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 189 வீர மறவரின் வெற்றிக் கூவல் அந்த இடத்தை அதிர் வைத்தது; இரவின் அமைதியை நடுங்கச் செய்தது. திடீரென்று இளம்வழுதி வீரன் எங்கே?' என்று வினவினான். அவன் உள்ளத்தில் இனம் புரிந்துகொள்ள முடியாத ஒரு கலவரம் ஊர்ந்தது; வேதனையாய் ஆசித்தது. צפי .دسي "iானா? இங்கே தானே நின் தான்? என் 'மனக் } தி நீர் கின ក្ញុំ சாத்தன். வீரனைத் தேடின பல குரல்கள். அவற்றுக்குப் பதில் தரும் எதிரொவி எழவேயில்லை. அங்குமிங்கும் தேடினர் பலர். சருகுகளைத் திரட்டி, தீக்கங்குகள் மீது குவித்து, நெருப்பு உண்டாக்கினார்கள் சில பேர். அங்கே வெளிச்சம் குதித்தது. உண்மையும் கோரமாய் குத்தியது அனைவர் பார்வையிலும். - வீரனின் வலிமை மிக்க உடல் உயிரற்றுக் கிடத்தது. ரத்தம் அவன் விாைவிலிருந்து பெருகி மண்ணை நனைத்து ஒடியிருந்தது. அவனால் வெட்டி வீழ்த்தப்பட்ட உட லங்கள் சரிந்து கிடந்தன அருகிலே. அவன் அறியா வண் ணம் பாய்ந்து அவனை விலாவில் குத்தியிருக்கக் கூடிய களப்பிரனும் வெட்டுண்டு விழுந்து கிடந்தான். அக்காட்சியைக் கண்ணுற்ற வழுதியின் உள்ளம் பதைபதைத்தது. அவன் முகம் குவிந்தது கண்கனி விருந்து நீர் கொட்டியது முத்திய தினம் வரை-ஏன், அன்று பகவில் கூட... யாரோ, எவனோ என்றிருந்த ஒருவன் திடுமென அவன் வாழ்வில் குறுக்கிட்டான். அவ னுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிட்டுத் திரிந்தவர்கனை ஒழித்துக் கட்டினான். முடிவில், அவனுக்காகவே தன் உயிரையும் கொடுத்துவிட்டான். அந்த அந்நியனைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/170&oldid=905990" இலிருந்து மீள்விக்கப்பட்டது