பக்கம்:விடிவெள்ளி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2 177 அவன் வந்தான்: எவன் என்று தெரியாதபோதே நான் அவனை உபசரித்து, உணவு கொடுத்து, தங்கி இருக்க இடமும் அளித்தேன். அதற்கு உரிய இன்றிகூட அவனிடம் இல்லையே! சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போய் விட்டானே? அவன் ஒரு கள் வனாகவே இருக்க ఇ)? ...' மங்கையர்க்கரசி பொருள் பொதித்த சிரிப்பு ஒன்று உகுத்தாள். இருக்கலாம் இருக்கலாம்.இந்த உலகத்தில் யாரைத்தான் நம்பமுடிகிறது!" என்று சொன்னாள். அந்தப் பேச்சிலும், அதை அவள் சொன்ன விதத்திலும் ஒரு குத்தல் மறைந்திருந்தது. அதை அவரும் உணர்த்தார். அவர் பார்வை அ:ேள் முகத்தில் பதிந்தது. அவன் கருத்தைத் துருவி ஆராயத் துடிப்பது போல, என்ன?’ என்று கேட்டது. அவர் தலையின் அசைவு ‘நமக்குள்ளே மறை வாகப் பேசியது போதும், உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் ஏன் வழுதியை தனி அறையில் அடைந்து வைத்தீர்கள்? உதவி என்று வந்த வனை ஏமாற்றி அவனைக் கொன்றுவிட நீங்கள் திட்ட மிட்டது ஏன்? வீரம் குன்றிவிட்ட நாட்டிலே தப்பித் தவறி தலையெடுத்த புது சக்தியை நசுக்கிவிட நீங்கள் ஆசைப்பட்டது ஏன்? நாட்டு மக்களின் அவல நிலையை நீக்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், அவனுக்கு நீங்கள் உதவிசெய்ய இசைந்திருப்பீர்கள். உங்களுக்கு ஈரநெஞ்சம் இல்லை...' மங்கையர்க்கரசி உணர்ச்சி துடிப்போடு பேசினான். சூடாக உதிர்த்தன சொற்கள், 'இதுபோன்ற விவகாரங்களில் நீங்கள் ஏன் தலையிட வேண்டும் என்று எனக்கு விளங்கவேயில்லை!" என்று மாறன் காரி முணுமுணுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/178&oldid=906003" இலிருந்து மீள்விக்கப்பட்டது