பக்கம்:விடிவெள்ளி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விடிவெள்ளி அவள் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள். - அடைத்துத் தாழிட்டுவிட்டு அங்கு ஒரு இடத்திலிருந்த சிறுவிளக்கை ஏற்றினாள். அவனைக் கவனித்தாள் அவனும் அவளை ஆராய்ந்தான். அவளுக்கு சுமார் முப்பது வயது இருக்கும் என மதித்தான் அவன். 7೧ಗಿ! பும் சுத்தமும் கலந்த ஆடை அவளுடைய அழகுக்கு இனிமை சேர்த்தன. 'அம்மா, எனக்கு நீங்கள் செய்த உதவி மிகப் பெரி யது. எனது நன்றியை....' பேச வேண்டாம்!” என்று விரல்களால் வாயைப் பொத்தி சாடை காட்டினாள் அவள் எங்கும் அமைதி ஏற்பட்டுவிட்டது இப்பொழுது நீ வெளியேறலாம்' என்றாள். தெய்வம் போல் வந்து உதவிய தாங்கள் யார் என்று. அவள் மென்முறுவல் பூத்து, குறுக்கே பேசினாள்: தான் தெய்வம் ஒன்றுமில்லை. சாதாரணப் பெண் தான். தமிழ் புலவர் ஒருவரை நான் எதிர்பார்த்து நின்றேன். திடீரென்று வெளியே ஏதோ பரபரப்பு ஏற்பட்ட துயே: ல் தெரிந்து பின்புறக் கதவைத் திாழிடலாம் என்று வந்தேன். நான் கைவைத்த சமயம் கதவு திறந்துகொள்ள அம் விலகி நின்று கவனித்தேன். பிறகுதான் உனக்கே தெரியுமே!’ அவள் அவனைக் கனிவுடன் நோக்கினாள். நீ சிறு பிள்ளை தான் இன்னும்! என்றாள். குறுநகை புரிந்தாள், என்ன கருத்தில் அவள் அப்படிச் சொன்ன ள் என்பதை அவனால் புரிந்துகொள்ள இயலவில்லை நீங்கள் யார் என்று...... ஆரம்பித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/23&oldid=906056" இலிருந்து மீள்விக்கப்பட்டது