பக்கம்:விடிவெள்ளி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண் ண ன் ( ! "நீதிக்குக் களங்கம் ஏற்படுத்தா திருக்கத் தன் கையைத் தானே வெட்டிக் கொண்ட பொற்கைப் பாண்டியன், கடலுண் மாய்ந்த இளம்பெருவழுதி, பாண்டியன் அறிவுடை நம்பி, ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் போன் தவர்களின் புகழ், கால வெள்ள த்தாலும் அசைக்க முடியாத கருங்கல் பாறை போன்றது அல்லவா? நெடுஞ் செழியன் காலத்தில்தான் கண்ணகி வெஞ்சினம் கொண்டு இம் மதுரை மூதுரை எரியினுக்கு இரையாக்கினாள். நீதி தவறினோம் என உணர்ந்த செங்கேணல் மன்னன் சிம்மா சனத்திலிருந்து விழுத்து மாண்டான். அவன் கோப்பெருந் தேவியும் உயிர் துதந்தாள். அதன் பிறகு பாண்டியன் சித்திாமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி புரிய லானான். இவன் காலத்தில் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. கண்ணகியின் சினம் தணிய இவன் பெரு விழா நடத்தினான். இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சோழனையும், சேரனையும் வேறு சில சிற்றரசர்களையும் போரில் எதிர்த்துப் பெரு வெற்றி கண் டான். கடைச் சங்கத்தைப் புரந்த பாண்டியரில் இறுதி மன்னனான கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியும், கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த கருங்கை ஒள்வாட் பெரும் பெயர்வழுதி, பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி, நல்வழுதி, கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந் திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, நம்பி நெடுஞ்செழியன், குறுவழுதி போன்றவர்களும் பாண்டிய குலத்துக்கும், தமிழ் நாட் டுக் கும் சிறப்பு தந்தவர்கள் தான். ஆனால் இளம்வழுதி...' மாமூலனாரின் தொண்டை கம்மியது. உணர்வுக் குழப்பம் அவரையும் ஒரு கணம் வாய்மூடச் செய்தது. இளம்வழுதியும் பேசாமலே அமர்ந்திருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/32&oldid=906075" இலிருந்து மீள்விக்கப்பட்டது