பக்கம்:விடிவெள்ளி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 விடிவெள்ளி "அத்தகைய ஆற்றலைப் பயன்படுத்தி நாட்டின் நிலையை ஏன் உயர்த்தக் கூடாது? அவர்களுடைய வாழ்விலே வளம் பிறக்க ஏன் வகை செய்யக் கூடாது?" என்று பதற்றத்தோடு கேட்டான் இளம்வழுதி. காட்டுத் தீயோடு விளையாட ஆசைப்படுவது அழ கல்வி தம்பி. அதில் நன்மை விளையுமென்று உறுதி கூற மூடியது. ஆனால் கேடு சூழும் என்பது திண்ணம் என்று கோடுங் கோலர்கள் வாழும் நாட்டை விடக் கடும் புலி வாழும் காடு நல்லது' என்று கூறியவர்கள் நம் முன்னோரல்லவா? நீடித்த அவல நிலையவிட, ஒளிமிகுந்த இல்வாழ்வு சிறந்தது அதற்கு வழி வகுத்துக் கொடுக்க வேண்டியது நம் பொறுப்பு......" - தேவர் கண்களைக் குறுகலாக்கி அவனை நோக்கி ஒரு பார்வை எறிந்தார் நம் என்றால்?’ என இழுத்தார். வசதி படைத்தவர்கள். அறிவும் ஆற்றலும் பெற்ற வர்கள், மனித உள்ளம் பெற்றவர்கள்..... இளம்வழுதி இன்னும் என்னனென்ன பேச ஆசைப் பட்டானோ? ஆனால், சந்தர்ப்பம் குறுக்கிட்டது. வளைகள் குலுங்கும் ஒசை அந்த அறையின் வாயிவில் எழுந்தது. என்னம்மா திலகம்?' என்று கேட்டபடி

  • * o ب : ! مثب xم وايي. لي؛ پ ,A%، يوبرئيت திரும்பினார் தேவர். அவருடைய அருமை மகள் அங்கே நின் ஜசன். -

முக்கியமான விஷயங்களைப்பற்றி எவருடனாவது பேசும்போதெல்லாம், வரகுணர் தனித்த அறையில் அமர்ந்து பேசுவதுதான் வழக்கம். அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருக்கையில் அந்தப்பக்கம் வேறு யாரும் விருவ தற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவசியம் ஏற்பட்டால் திலகவதிதான் அங்கு தலை காட்டுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/51&oldid=906117" இலிருந்து மீள்விக்கப்பட்டது