பக்கம்:விடிவெள்ளி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5: விடி வெள்ளி களுக்கு நல்லபிள்ளையாக நடந்துவருகிறார் என்றுதானே அர்த்தம்? இவர் என் பேச்சை மறுத்துரைப்பதில் ஆர்வம் காட்டியது ஏன் என்று எனக்கு இப்பொழுது தான்விளங்கு கிறது. வரகுணவர் நாட்டு மக்களின் எழுச்சியை அடக்கி ஒடுக்க ஆசைப்படுல ரே தவிர, அவர்கள் வெற்றி பெறு வதற்கு வழிவகுத்துத் தரமாட்டார்' என்று அவனுக்கு திச்சயமாகத் தோன்றிவிட்டது. - கூற்றின் நாயனார். இவரிடம்நேற்று இரவில் நிகழ்ந்த வற்றைக் கூறி, இனி என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை நடத்துவதற்காகவே தேவரை அழைத்திருப் பான். இவரும் தருணத்தைத் தனக்கு லாபமாகப் பயன் படுத்துவதிலேயே கண்ணாக இருப்பார். என்னிடம் அறிந்துகொண்ட செய்திகளை வைத்துக் கொண்டு, அவருடைய அறிவு ஏதேனும் திட்டம் வகுக்காமலா இருக் கும் தனது ஆசைகளுக்கு நான் குறுக்கே நிற்கக்கூடியவன் என்று தோன்றினால் அவர் என்னை அகற்றிவிடத் துணி வார் என்பதில் ஐயமில்லை' என்றும் அவன் மனம் முடிவு 卤瘤亚-母桓岛· - - É இனி என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிக்க முடியாது குழம்பியது இளம்வழுதியின் உள்ளம். அவன் கால்கள் அவனை எங்கெங்கோ நடத்திச்சென்று, இறுதி யில் பூங்குடி ஆச்சியின் குடிசையிலேயே கொண்டு சேர்த்தது. - - மீனாட்சி ஆச்சி அவன் வருகையை ஆவலோடு எதிர் :ார்த்துக காத்திருந்தவள் போல் முகம் மலர்ந்து வரவேற். நாள்; இதே ந்ேது விட்டார். இவரைப் பற்றித்தான் சென்னேன்' என்று குடிசைக்குள்ளிருந்த யாரிடமோ

அறிவித்தாள். "யார் அது?’ என்று கேட்டான் இளம்வழுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/55&oldid=906125" இலிருந்து மீள்விக்கப்பட்டது