பக்கம்:விடிவெள்ளி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 விடி வெள்ளி "குடித்துவிட்டுக் கலகம் செய்கிற களப்பிரர்கள் வருகிறார்கன்' என்ற செய்தி வேகமாகப் பரவியது. வீதி களில் நடந்து கொண்டிருந்தவர்களும், கோயிலுக்குச் செல்வோரும், அவரவர் கருமமே கண்ணாக நின்றோம். பரபரப்புற்று ஒடி ஒளியாயினர். அருகிலிருந்த வீடுகளுக் குள்ளும் புகுந்து பதுங்கி விட்டார்கள். அமுதவல்லியும் அவள் தோழியும் எப்படி எங்கு போய் மறைத்தார்கள் என்று யாருமே கவனிக்கவில்லை. முன்பு உயிர்ப்பும் எழிலும் திை தி இப்போது வெறிச்சிட்டுக் கிடந்தது வெறி உருவினரான வீரர்கள் மட்டுமே காட்சி தந்தார்கள். :வன ஞானியை எதிர்க்கத் துணிந்த வீணன் எங்கே’’ என்று கத்திசவாறு அனைத்தார்கள். பெரிய தெருவோடு நின்றுவிடாது. பக்கத்துத் தெருக்களிலும் புகுந்து அமைதியைக் குலைத்தார்கள். குற்றவாளி அகப் படவில்லையே?’ என்ற கவலை அவர்களுக்ரு: எழவில்லை. 'வெறிக்கூத்து பயிலுவதற்கு ஒரு வாய்ப்புக்கின்டத்ததே. என்ற மகிழ்ச்சியோடும் உற்சாக உணர்வோடும் செயல் புரிந்தார்கள் அவர்கள். தங்களுக்கே ஒரு திருப்தி ஏற்பட்ட வுடன், ஏதோ மகத்தான கடமையைச் செய்து முடித்த மனநிறைவுடன் வேறு திக்கிலே சென்றார்கள். - களப்பிரர்களின் இத்தகைய வெறிக் கூத்துகள் மதுரை மாநகரினருக்குப் புதிய நிகழ்ச்சிகள் அல்ல, பெருமழையையும், சூறாவளியையும், கொடிய தொத்து நோயையும் மனிதர்கள் சகிக்கக் கற்துக் கொள்வது போலவே.வெ.நியர்களின் பேயாட்டங்களையும்பொறுமை யோடு ஏற்றுத் தாக்குப் பிடிக்கவும் பழகி விடுகிறார்கள். அனைவருக்கும் துணைபுரிய விரும்பியதுபோல் இருள் எங்கும் பரவியது. இருட்டின் பாதுகாப்போடு சாத்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/65&oldid=906148" இலிருந்து மீள்விக்கப்பட்டது