பக்கம்:விடிவெள்ளி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 வல்லிக்கண்ணன் அவள் எங்கிருப்பாள் என்பது மட்டும்தெரியுமானால், அவன் நள்ளிரவு என்று கருதமாட்டான்; எதிர்ப்படக் கூடிய தடைகள், இன்னல்கள் எதையுமே பொருட்படுத்த மாட்டான்! காதல் எனும் வில் உந்திவிட்ட அம்பாக மாறி அவன் நேரே விரைந்தோடித் தனது ஆசையின் எல்லையாக விளங்கிய அழகிய்ைத் தொட்டு விடுவானே? அவள் இருப்பிடம் தெரியாததுதானே பெரிய தடையாகி விட்டது. இப்போது? நினைவின் நிழலாகப் பூத்துக்குலுங்கிய அமுதம் அவன் கனவின் உயிராகி, உணர்வில் விளையாடி, அதிகாலைவி லேயே அவனுக்கு விழிப்பு புகுத்திவிட்டான்! முந்திய தினம் போலவே அன்றும் வைகறை வேளை யில் ஆற்றை நோக்கிச்சென்றால்: அவளைக் காணமுடியும் என்று அவன் மனம் ஆசை காட்டியது. அவன் போக லாமா வேண்டாமா? என்று ஒரு கணம் தயங்கினான். ஆசை அவனை இழுத்துச் சென்றது. அவ்வர்று செல்லும் போது அவனுக்கு ஒரு வருத்தம் ஏற்படத்தான் செய்தது. 'அமுதவல்லி அங்கு தனியாக வரமாட்டாளே; அவளுடன் மற்றும் பல பெண்களும் வருவார்கள் அல்லவா?’ என்ற நினைப்புதான் அதற்குக் காரணம். ஆனால் அன்று அவனுக்கு நல்ல வாய்ப்பாகவே அமைந்தது அமுதவல்லி தோழிகள் சூழ வரவில்லை . ஒருத்தி துணை வர அழகு மயிலென அசைந்து வத்தாள் அவள். துரத்தில் கண்டபொழுதே அவன் உள்ளம் உவகை யால் நிரம்பியது. அவள் முகம் இனிய தாமரைபோல் மகிழ்வால் மலர்ந்தது. அவளும் அவனைப்பற்றி எண்ணிக் கொண்டேதான் இரவுப்பொழுதை ஒட்டி அடைத்திருக் கிறாள் என்பதை அவள் முகமலர்ச்சியும், விழிகளின் தாவு தலும் காட்டிக் கொடுத்த ! விடி-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/86&oldid=906193" இலிருந்து மீள்விக்கப்பட்டது