பக்கம்:விடிவெள்ளி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

游翠 鲨 விடிவெள்ளி “எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பண்பு என்னு: டையது. அஞ்சியிருந்தால் பொட்டுப் பூச்சி போல் இருளில் ஒண் டிக்கி-க்க வேண்டியதுதான்' என்று அவன் கம்பீரமாக மொழிந்தான். - பெருமையும், வியப்பும் கலந்த பார்வையைப் பரி சளித்தாள் அவள் அவனிடம் எவ்வளவோ பேசவேண். டும் என்று தவித்தது அவள் மனம். ஆனால், நானம் அவள் உதடுகளுக்குப் பூட்டு போட்டுவிட்டது! அவனது எழில் விழிகள் அவன் முகத்துக்குச் சென்றன அங்கேயே தங்கி, ஒளி தெறிக்கும் அவனுடைய கண்களைப் பார்வை யால் தொட்டு இன்புற வேண்டும் என்று துடிப்பது டோல் இமைகள் படபடத்தன. ஆயினும், அத்துணிவு இல்லா தலை போல் அலை வேகமாய்த் தரை நோக்கிப் பாய்ந் தன! "சட்டென எண்ணிக் கொண்டவள் போல் அவள் பேசினாள்: உங்களைக் காண என் தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். அவளை அழைத்து வருகிறேன்." அவன் வியப்புடன் கேட்டான்! நீ என்னைப் பற்றி உன் பெற்றோரிடமும் சொல்லி விட்டாயா?" என்று. 'ஊங்’ என ஒயிலாகத் தலையசைத்தாள் அவள். நீருற்றுப் போல் குமிழியிட்டுப் பொங்கிவந்த சிரிப்பை .. வளாப் முஆவலித்தாள். உதவி புரித்த வர்களை மறத்துவிட முடியுமா? எனக்குக் காலம் அறிந்து உதவி செய்தவர்களைப் பற்றி நான் பேசாமல் இருக்க முடியுமா?" என்றாள். மோகனமாய்ச் சிரித்தப்டி. அவன் இதயத்தில் தைக்கும் பார்வை ஒன்றை வீசிவிட்டு, உன்னே ஓடிப்போனாள் அமுதவல்லி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/93&oldid=906209" இலிருந்து மீள்விக்கப்பட்டது