உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 மு.கருணாநிதி வேட்டைக் காடுகள் போர்க்களமாகி விட்டன. விடுதலை பேரிகை முழக்கிடும் வீரர் பாசறைகளாகி விட்டன. இதோ இந்தோ சீன! பிரஞ்சு ஏகாதி பத்தியத்தை எதிர்த்து இந்தோ சீன மக்கள் கொரில்லா யுத்தம் நடத்துகிறார்கள். இரண்டு லட் ஈத்து எண்பத்தேழாயிரம் சதுர மைல் பரப்பளவு உள்ளதும், 240 லட்சம் மக்களைக் கொண்டதுமான இந்த நாடு - கொச்சின் சைனா, அன்னாம், டாங்கிங், கம்போடியா, லவோஸ் என்ற பகுதிகளைக் கொண்ட நேசம் - பிரஞ்சு நாட்டுப் பிடியிலே அகப்பட்டிருப் பதை எதிர்த்து டாக்டர் கோசிமின் என்ற தலைவனின் கீழே விடுதலைக் கிளர்ச்சி நடத்துகிறது. பாவோடாய் என்ற பொம்மை ராஜாவையும் வேறு சில பதுமை களையும் பிரஞ்சு ஆதிக்கம் தன் சூத்திரக் கயிற் றிலே கட்டிவிட்டு விடுதலை தாகத்தை தடுத்திட முனைகிறது. 45-ம் ஆண்டிலிருந்து இதுவரையிலே லட்சந்து பத்தாயிரம் கோடி பிராங்குகள் செல விட்டு பிரஞ்சுக் கழுகு யுத்தம் நடத்தியிருக்கிறது இந்தோ சீனாவில்! 52-ம் ஆண்டுக்கு 43 ஆயிரம் கோடி செலவிட திட்டம் தீட்டியிருக்கிறது. இது 45-ம் ஆண்டில் மட்டும் செலவழிக்கப்பட்டதை விட 135 பங்கு அதிகமான தொகையென்று கணக்கிடப் படுகிறது பணட பிணம் -இவைகளைக்காட்டி இந்தோ சீனாவின் ஈடுதலைக் கிளர்ச்சியை முறியடித்துவிடலா