உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 14 மென்று தப்புக் கணக்குப் போடுகிறது பிரஞ்சு ஏகாதிபத்யம். உயிரைச் சிந்திடினும் கவலையில்லை எனக் கங்கணம் கட்டியுள்ள காளையர் விடுதலைக் கிளர்ச்சியின் தூதுவர்களாய் நிற்கின்றார்கள் உலக அரங்கின் முன்னே! இந்தோ சீனாவிலே ! . இந்தோனேஷ்யாவிலே நடைபெற்ற விடுதலைப் போரை மறந்துவிட முடியாது. சர்க்கரை, பெட ரோல், ரப்பர், ஈயம் முதலிய பொருள்களை தமதாக் கிக்கொண்டு கொழுத்துக் கிடந்த டச்சுக்காரரை விரட்டியடிக்கும் பணியிலே விடுதலைக் கிளர்ச்சி மூண்டது இங்கே! பெரும்பாலான முஸ்லீம் மக்க ளைக் கொண்டதும் மூவாயிரம் சிறு சிறு தீவுகளைக் கொண்டதும் இந்தோனேஷ்யா. ஜாவா, சுமத்ரா முதலிய தீவுகளில் சுதந்திரப் போர் நடத்தி மக்கள் குடியரசை மலரச் செய்தனர். டாக்டர் சுகர்வேவும் தலைவரானார். புது வாழ்வு அரும்பியது விடு;லைக் கிளர்ச்சியால்! ஆப்பிரிக்கக் கடலோர முள்ள பூமி மடாஸ்கர். புரட்சிகள் - கிளர்ச்சிகள்- சுதந்திர சங்கநாதங்கள் புரட்சிகள்-கிளர்ச்சிகள். கேட்டிட முடியாத அளவுக்கு வெகு தெலைவில் உள்ள இடம். நீங்கள் நினைக்கிறீர்களா ; அங்கே ஒரு விடுதலைக் கிளர்ச்சி நடக்க முடியுமென்று! நடந்திருக்கிறது தோழர்களே; கடந்திருக் றது. மடகாஸ்கரில் உள்ள மல்காஷ் மக்கள்பிரஞ்சுக்