உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலைக் கிளர்ச்சி 36 சியாங்கே ஷேக் நினைத்ததுபோல, பெரிய கட்சி-முதல் கட்சி -ஒரே கட்சி-ஒரே தலைமை வேறு கட்சி கூடாது - என்ற அகம்பாவ நினைப்பால் திமிர் வெறியால், காங்கிரஸ் ஒன்று தான் கட்சி யென்ற கருத்தற்ற கொள்கை கொண்டவர்கள் காங்கிரசிலே பலர் இருக்கிறார்கள். அந்தப் பலரும் நிச்சயமாகத் தோற்றுவிட்டார் கள் தென்னாட்டிலே! ஆம்; தேர்தலிலே ! பொதுத் தேர்தல் கற்பிக்கும் பாடங்களிலே, தென்னாடு, வடநாட்டோடு இணைந்திருக்க விரும்பவில்லை யென்பதும் ஒன்று. இந்திய யூனியனின் பொதுத் தேர்தலிலே, விந்தியத்திற்கு தெற்கு காங்கிரஸ் முறியடிக்கப்பட் டிருக்கிறது இதற்குப் பொருள் என்ன? டில்லியை தெற்கு விரும்பவில்லை யென்பதுதானே ! காங்கிரஸ் ஆட்சிக்கு எதிர்ப்பாக நாடு முழுவதும் தான் பிரச் சாரம் செய்யப்பட்டது. ஆனால் வடநாட்டிலே காங்கிரஸ் தான் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரசை எதிர்த்தோர் சிலர், வெற்றி பெற் றிருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் பிற் போக்கு சக்திகளேதான். இந்த முடிவு எதை விளக்குகிறது.