உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைக்கிளர்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 மு. கருணாநிதி வடக்கே வளமான நாடு. தெற்கு வறுமைக் காடு. இந்தக் காட்டை அமைத்தோர் டில்லி வாசி கள். ஆகவே அவர்கள் தொடர்பு வேண்டாமெனத் தீர்ப்பு கூறிவிட்டது தென்னாடு. பிற்போக்கு முதலா ளிக் கும்பலின் பிடியிலே இருக்க திராவிடம் விரும் பவில்லை. இதைத்தான் தேர்தல் தெளிவாக்கு கிறது. ம். அமெரிக்காவின் விசுவாசப் பிள்ளையாக நடந்துகொள்ள ஆசைப்படுகிறது வடநாட்டு வட்டா டில்லி ஆதிக்கம். அமெரிக்காவிலேயிருந்து இந்திய யூனியனில் பவனி வருகிறவர்கள் உதிர்க் கின்ற உபதேசங்களை கவனித்தால் இந்த உண்மை தெளிவாகிறது.அமெரிக்கா அம்பாசிட்டர் பெளல்ஸ் பேசுகிறார் அந்நியநாட்டு மூலதனம் இந்திய யூனியன் வளத்திற்கு மிக மிக அத்யாவசியமென்று ! வந்து போன பிளாக்துரை தன்னை சந்தித்த நிரூபர்களிடத் திலே கொட்டியிருக்கிற வார்த்தைகளே விசித்திர மானவை; ஆபத்தானவை கூட! அயல் நாட்டின் பணம் இங்கே வந்து சுழல்வது சும்யூனிஸ்ட் அபாயத்தை அதிகப்படுத்தாதா என்ற கருத்தமைந்த கேள்விக்கு அவர் பதில் சொல்லு கிறார், "கம்யூனிஸ்ட் அபாயத்தை ஒழிக்கத்தானே அந்தப் பணம் இங்கு வரவேண்டு மென்கிறேன் " என்ற விதத்திலே!