பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

எஸ். எம். கமால்

கொள்ள இயலாத இறுதிநிலை வந்துவிட்டது.[1] கோட்டையிலுள்ள இராணுவ மருத்துவர் டாக்டர் ஒயிட் அளித்துவந்த மருத்துவ உதவி பயன் அளிக்கவில்லை. மன்னருக்கு அவரது இறுதிநிலை புரிந்துவிட்டது. இத்தனை ஆண்டுகால சோதனைக்கு இடையில் தாம் விரும்பி வாழ்வதற்குரிய சுதந்திர மண் கிடைக்கவில்லை என்றாலும் சாவதற்காவது இருக்க வேண்டும் என அவர் எண்ணி இருத்தல் வேண்டும். வெள்ளைப் பரங்கிகளின் அடிமைச் சிறையில் அவரது வாழ்வை முடித்துக் கொள்ள விழையாததால் அவரது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது.

இதனை உணர்ந்த மன்னரது நண்பர் சர்க்காரியாபுரம் வெங்கடாசலம் செட்டியார் மன்னருக்கு இடமாற்றம் ஏற்படுத்தினால் நல்லது என நம்பினார். கும்பெனியாரது மருத்துவர் ஒயிட்டும் மன்னரது உடல் நலம் பெற இடமாற்றமும் புதிய காற்றும் பயன்படும் என்பதை கோட்டைத் தளபதி மேஜர் பிராக்கிலியிடம் தெரிவித்தார். செட்டியாரது பிணையிலும் பொறுப்பிலுமாக கோட்டையிலிருந்து, சென்னை கோட்டைக்கு அடுத்துள்ள பிளாக் டவுனில் உள்ள செட்டியாரது விட்டிற்கு மன்னரை அனுப்பி வைக்க தளபதி இசைந்தார். 22-1-1800 அன்று மாலையில் வீரர் ஒருவர் பாதுகாப்பில் மன்னரை பிளாக் டவுனுக்கு அனுப்பி வைத்தார். உற்றாருக்கும் ஊழியருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் ஒருநாள் முழுவதும் உணர்வுடன் இருந்த சேதுபதி மன்னர் 23 24-1-1809 அன்று இரவு வரலாற்றில் வாழும் பொன்றாத புகழ் உடம்பு எய்தினார்.[2]

மன்னரது மறைவு பற்றிய செய்தியை அறிந்த தளபதி பிராக்லி அவருக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை முறைப்படி நிறைவேற்றி வைக்குமாறு வெங்கடாச்சலம் செட்டியாரை கேட்டுக்கொண்டார். கும்பெனியாரது காவலில் இருந்த சேதுபதி மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி சென்னைப்


  1. Madurai collectorate Records, Vol. 1197. 1-2-1809 p. 136.
  2. Ibid., 1-2-1809, pp. 135-37.