பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

எஸ். எம். கமால்

புரம் சீமையின் பெரும்பகுதி, அவரது ஆதிக்கத்தின் கீழ் வந்தது.[1] நவாப்பின் ஆட்சி அங்கு பெயரளவில் தான் நடைபெற்றது. அதனை அடியோடு அகற்றி தலைநகரமான இராமநாதபுரம் கோட்டையைக் கைப்பற்றுவதற்கு நல்லதொரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தார்.

மைசூர் மன்னர் ஹைதர் அலிகானின் இராணுவ உதவியையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.[2] அப்போது மறவர் சீமையில், சுற்றுப்பயணம் செய்த ஸ்வார்ட்ஸ் பாதிரியார் நாடு முழுவதும் பெரும் மாற்றம் ஒன்றினுக்கு ஆயத்தம் ஆவது போன்ற மாறுபட்ட சூழ்நிலையில் காட்சி அளித்ததாக தமது குறிப்புகளில் வரைந்து வந்துள்ளார்.[3] சேது நாட்டில் சேதுபதி இல்லாவிட்டாலும், சேதுபதியின் மாமனார் மாப்பிள்ளைத் தேவர் மன்னராக வந்தால் போதும் என்ற அளவில் மக்கள் மனநிறைவு கொண்டு அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர். இராமநாதபுரம் சீமையிலிருந்து நவாப்பின் ஆட்சி முழுமையாய் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.


கி. பி. 1780-ம் ஆண்டு ஜனவரி மாதம் மைசூர் மன்னர் நவாப்பின் மீது மோதுவதற்குத் திட்டமிட்டார். சூறாவளி போன்று அதனைச் செயல்படுத்தினார். திருச்சி, தஞ்சை, தென்னாற்காடு, சென்னை மீது மின்னல் தாக்குதல் ஒன்றைத் தொடுத்தார். இதற்கிடையில் பிரதானி தாண்டவராயபிள்ளை மரணம் அடைந்து விட்டதால் சிவகெங்கை அரசியாரின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்த மருது சகோதரர்கள் ஹைதர் அலியின் கர்நாடக படை எழுச்சியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஹைதர் அலியின் திண்டுக்கல் கோட்டை தளபதி அளித்த ஓர் பெரிய படை அணியைக் கொண்டு சிவகெங்கை ராணியுடன் சீமைக்குள் நுழைந்தனர். நவாப்பில் கெடிபிடியில் சிக்கியிருந்த குடிமக்கள் மருது சேர்வைக்காரர்களையும் ராணியையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன் சிவகெங்கைச் சீமையின் விடுதலைக்கும் உதவினர். சிவகெங்கைக் கோட்டையைக் கைப்


  1. Correspondence on Southern Polloms (1802), p. 28.
  2. м.с.с., Vol. 21, 12-12-1772, p. 282-83.
  3. Schwartz, Fr. Lr. Dt. 19–12–1780 (Pudukkottai State Records),