பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
எஸ். எம். கமால்
 

கலம். (அதாவது 37,42,200 படி நெல்).[1] மக்களிடத்தில் பெறப்பட்ட தானியங்களைப் பதுக்கி வைத்து கிராக்கியான நேரத்தில் விற்பதற்காக தானியங்களை இந்தக் களஞ்சியங்களில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும். பதுக்கி வைப்பதற்கு கடற்கரையில் மட்டும் தானிய களஞ்சியங்கள் கட்டப்பட வேண்டும்[2] இராமநாதபுரத்தில் உள்ள 'இறை ஆயிரம் கொண்டான்' என்ற அரண்மனைக் களஞ்சியம் ஒன்றே பல லட்சம் கலம் நெல்லை சேமித்து வைக்கப் போதுமானதாகும். இதைக் கவனித்து வந்த பணியாளர் குழு. மக்களுக்குத் தேவையான பொருட்களையும், கைத்தறித் துணிகளையும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட பொருட்களையும் விற்று வந்தனர்.[3] மேலும், மறவர் சீமை செலாவணியில், சுழிச்சக்கரம், ஸ்டார் பக்கோடா, போர்ட்டோ நோவா பக்கோடா என்ற நாணயங்கள் புழக்கத்தில் இருந்துவந்தன. கைத்தறி ஏற்றுமதி மூலம், இராமநாதபுரம் அரசுக்கு கிடைத்த டச்சுக்காரர்களது போர்ட்டோ நோவா பக்கோடா மிகுதியான செலாவணியில் இருந்தது. வேறு நாணயங்கள் எதுவும் செலவாணியில் இல்லாத நிலையில் டச்சுக்காரரது நாணயங்களுடன், இதர நாணயங்களின் மதிப்பை நிர்ணயித்து, ஒருவகை நாணயத்திற்கு மாற்றாக பிறிதொருவகை நாணயம் வழங்கும் வசதியும், இராமநாதபுரம் அரண்மனையில் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாணய மாற்றுதல் மூலம் கழிவுத் தொகையாக அரசுக்கு நல்ல வருவாயும் கிடைத்து வந்தது.[4]


கைத்தறித் துணியைப் பொறுத்தவரையில், மறவர் சீமை முழுவதும் இருந்த தறிகளில், பரவலாக அவை தயாரிக்கப்பட்டன. பரமக்குடியில் மட்டும் மிகவும் அதிகமாக 670 தறிகள் இருந்தன. பட்டு நூல்காரர்களிடம் 600-ம் சோனகர்களிடம் 35-ம், கைக்கோளர்களிடம் 35-ம் இயங்கி வந்தன. இவைகளில் 150 தறிகள் மன்னரது ஒப்பந்தம் பெற்று உற்பத்தியில் ஈடுபட்டிருந்தன. இந்தத் தறிகளில் அப்பொழுது பெரும்பாலும்,


  1. Revenue Consultations, Vol. 91-B, pp. 4755 (1797)
  2. —do— Vol. 91-B, 14-12-1797, pp. 4749–51
  3. —do— Vol. 50-A. (1793). pp. 546-47
  4. —do— Vol. 50-A (1793), pp. 550–51