உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூகோள போதனை

15


பூகோளத்தையுங் கூட, போதனைக்காக மட்டுமன்றி, தெளிவுக்காகப் படிக்கும் யாவரும், இந்தஉபகண்டம், நிலப்பண்பு, சீதோஷ்ணப் பண்பு ஆகியவைகளிலே, மூன்று தனித்தனி இடமாக இருத்தலைக்காணலாம். மலையும் மணல் வெளியுங்கலந்த வடமேற்குப்பாகம், இமாலய அடிவட்டாரம் என்னலாம், வளமும் வற்றாநதிகள் பாய்வதுமான கங்கை நதி தீரம், தென்பீட பூமி, என்று மூவகை நாடுகள், உள்ளன. இவை, பிரிட்டானியர், டென், ரோமன், நார்மன் எனும் பல்வேறு இனத்தவருக்குத் தம்நாடு வேட்டைக் காடாவதைக் கண்டு கசிந்து கிடந்த காலத்திலே, தேன் கசியும் கவி இயற்றி, மணம் வீசும் வாழ்வுடன்,

"வானிடை மிதந்திடும் தென்றலிலே
         மணிமாடங்கள் கூடங்கள் மீதினிலே
 தேனிடை யூறிய செம்பவள
          இதழ்சே யிழையாருடன் ஆடுவோமே"
 என்று பள்ளுப் பாடி வாழ்ந்த இடங்கள்!

பூகோள போதனை புரியும் "பூஜ்யர்கள்" ஸ்காண்டிநேவிய தீபகற்பமென்று இயற்கையால் ஒரே வட்டாரமாக்கப்பட்டுள்ள இடம், ஏன் ஸ்வீடன் என்றும், நார்வே என்றும் இரு அரசுகளாகப் பன்னெடுங்காலமாக உள்ளன என்பதையும், ஐபீரியன் தீபகற்பம், ஸ்பெயின் என்றும் போர்ச்சுகல் என்றும் இரு பிரிவாக, இரு அரசாக ஏன் உள்ளதென்பதையும், இங்குள்ள பெரிய பண்ணை அளவுள்ளதான ஒரு லக்சம்பர்க் ஏன் தனி அரசு, தனிவாழ்வு கோருகிற தென்பதையும், சிறுநாடு-