உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

விடுதலைப் போர்


வேந்தரையும் படையுடைய மாந்தரையும், வளமிகு தரணியையும் பெற்று வாழ்ந்த நாம், நம்மைத் திராவிடர் என்று கூறிக்கொள்ளக் கூசுவது, மடமையன்றோ!

பூகோள போதனை !

பிரிட்டிஷ் பிரபுக்கள் இந்திய உப கண்டத்தில் ராஜப் பிரதிநிதிகளாக வராமலிருந்த காலம் ஒன்ற இருந்தது ! ஏன் ! பிரிட்டிஷ் பிரமுகர்கள் மொகல் தர்பாரிலே, அனுமதி பெற்று பேட்டி கண்டு,சலாமிட்டுக் குனிந்து நின்று, ஜாடை தெரிந்து சரக்கைக்காட்டி, வினயமாக வியாபாரம் செய்த காலம் ஒன்று இருந்தது. பொன்னும் மணியும் கொழித்த காலம்! வீரரும் தியாகியும் உலவிய நேரம்! வாழ்க்கை ஓர் விருந்தாக இருந்த வேளை. அந்தக் காலத்திலே திராவிடம் தனி! பாகிஸ்தான் தனி! இந்து மன்னர்கள் தனித்தனி! அந்தக் காலத்திலே கட்டப்பட்ட அழகிய தாஜ்மஹாலைத்தான், அகில உலகிலிருந்தும் வரும் யாத்ரீகர்கள் இன்றும் கண்டு, போற்றுகின்றனர்.

"அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
       அழகாய் முத்து குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்
        முல்லைக்காடு மணக்கும் நாடு"

என்ற விதத்தில் இருந்தது திராவிடநாடு.

சரிதமும் பூகோளமும் சேர்த்துப் பார்ப்போமானால், இந்திய பூபாகத்தில் மூன்று தனி அரசுகள் அமைவதே முறை என்பதை யாரும் உணர்வர்.