உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் நாடு

13


கழகம் என அழைக்க வேண்டும் என்று தீர்மானித்தது.

இது நமது எதிர்கால வேலைத்திட்டத்திற்கு மிக்க ஊக்கமும் ஆக்கமும், எழுச்சியும் கவர்ச்சியும் தரக்கூடியது என்பது நமது கருத்து. இன்னமும் தெளிவாகத், தென்னிந்திய என்ற தொடரையும் நீக்கிவிட்டுத், திராவிடர்கழகம் (Dravidian League) என்ற பெயரை ஏற்று, நமதுகட்சி, திராவிடநாட்டுப் பிரிவினையை மூலாதார வேலைத் திட்டமாகக் கொள்ள வேண்டுமென்பது நமது நோக்கம். நாம் திராவிடர், நமது நாடு திராவிடநாடு, நமது நோக்கம் திராவிடநாட்டைத் திராவிடருக்காக்குவது. நாங்கள் பார்ப்பனர் அல்லாதார் என்று கூறிக்கொள்வதும், எங்கள் நாடு இந்தியாவிலே ஒருபாகம் என்று பேசுவதும், எங்கள் நோக்கம், பார்ப்பனரல்லாதாருக்கு நீதி கேட்பது என்றுரைப்பதும், ஏன்? நமக்கென்ன, தனிப்பெயர் இல்லையா, தனி இடம் இல்லையா, அதைக் கூறவும் கேட்கவும், வெட்கமா ! நீக்ரோ தன்னை நீக்ரோவென்று கூறிக்கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறான்! எஸ்கிமோவும் அப்படியே! நாடே இல்லாத யூதனுக்கும், இனப்பெயர் என்றால் ஓர் எழுச்சி! காடன்றி நாடு ஏதும் சொந்தமின்றி, கால் நடையாக இங்கு வந்து திராவிடரின் காலடியிற் கிடந்து இன்று தங்கள் காலடியிலே திராவிடரைக் கிடத்திக்கொண்டு, பூதேவர்களாய், புண்ய சீலர்களாய், போக புருஷர்களாய், ஆண்டவனின் அர்ச்சகர்களாய், வாழும் இனம், தன்னை ஆரிய இனம், என்று கூறிப் பூரிக்கிறது. முடியுடைய