உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

விடுதலைப் போர்


நகரங்களிலே, பரவிற்று. அசாமிலுள்ள கௌஹத்தியிலிருந்து அம்பா சமுத்திரம்வரையிலே, பாஞ்சால நாட்டு லாகூரிலே, வங்க நாட்டுக் கல்கத்தாவிலே, ஐக்ய மாகாண காசியிலே, ஆந்திரத்திலே, மராட்டிய நாட்டிலே, பல்வேறு நகர்களிலே, பெரியார் திராவிட நாட்டுப் பிரிவினை கோருகின்றனர் என்பது மட்டுமல்ல, அதைத்தவிரப் பிரிதொன்றையும், நாட்டுநலி போக்கும் மருந்தென்று கொள்ளார் என்ற நிலையும் உண்டாக்கி விட்டது. திராவிடநாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சியின் எதிரொலியெனக் கிளம்பிய பாகிஸ்தான் திட்டம் வெற்றி பெற்று விட்டது. முஸ்லீம் வீகின் ஜீவாதாரக் கொள்கையாக்கப்பட்டு விட்டது.

மற்றோர் மகிழ்ச்சிகரமான செய்தி. இனமறியாது இடர்ப்படும் இழிகுல மக்களல்ல நாம்! பண்டைப் பெருமையும் பண்பும் செறிந்த மக்கள், வளமும் வசீகரமும் மிளிரும் நாட்டுக்குடையோர், ஆனால் நம்மை நாம் மறந்தோம், நாட்டை இழந்தோம், நலிந்தோம்; நாம் யார், என்பதை நவிலவும் கூசிப் பார்ப்பனர் அல்லாதார் என்று, தனிப்பெயர் இல்லாதார் போலத் தடுமாறி வந்தோம். இந்நிலையைப் பெரியார் தீரமாக மாற்றித் திருவாரூரிலே, நாம் திராவிடர்கள் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆனால் நமது கட்சிக்கோ இன்னமும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று பெயருளது. இனத்தின்மீது நமது இலட்சியம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தப் பெயர் எடுத்துக்காட்டவில்லை. எனவே சேலத்தில் கூடிய நிர்வாகக்கமிட்டி, இனி நமது கட்சியைத் தென்னிந்திய திராவிடர்