உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் நாடு

11


விட்டது. ஆங்கிலேயரை மிரட்டி அரச உரிமை பெற்று அதை அக்கிரகாரத்துக்குத் தானம்தந்து விடுவதா? அழகாகுமா ? ஆண்மையாமோ? என்று தன்மானமொழி கேட்கிறது. திராவிட அரசுரிமையைப் பெற, ஊனுடல் கேட்பினும் தரத்தயங்கேன் என்ற வீர உரை எழும்பிவிட்டது. எங்கும் இந்த எழுச்சி! மங்கிய உணர்ச்சி மீண்டும் பெற்றே தீருவோம் என்ற சூளுரை கேட்டுப் பூரிக்கிறோம்.

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம். இது நமக்கே உரிமையாம் என்பதும் தெரிந்தோம். இதனை இந்தியாவெனும் உபகண்டத்திலே பிணைத்திடும் சூதினை வெறுத்தோம். இனி, இந்த இணைப்புக்கூடாது, தனி அரசு நாட்டுவோம், என்று ஆணை கூறிடும் வீரர்களை அணி வகுப்புகளிலே கண்டோம், அகமகிழ்வு கொண்டோம்.

சொந்த நாட்டிலேயே அடிமைகளாகிச், சோற்றுத் துருத்திகளுக்கும் பாதந்தாங்கி வீரமிழந்து விவேகமிழந்து அவதிப்படும் திராவிட இனம், இன்று தன்னை அறிந்து எழுச்சி பெறவும், தனது நாட்டை மீட்கவும் துணிந்தது. இது உலகிலே நடைபெற்ற விடுதலைப்போர் வரலாறுகளிலே, இடம் பெறும் தன்மையது. மெளனத்தால் இதனை மறைப்பதாக மனப்பால் குடிக்கும் மௌடிகர்களும், மிரட்டி அடக்கப்படும் குருடர்களும், காலமெனும் குருவிடம் பாடங்கேட்பர். அவர் பற்றி நமக்குக் கவலையில்லை. திராவிடநாட்டுப் பிரிவினையை, நீதிக்கட்சி, திருவாரூர் (மாகாண) மாநாட்டிலே, ஏற்றுக்கொண்டது. பெரியாரின் பெருமுழக்கம், இந்தியாவின் பல்வேறு