உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

ஐந்து அரசுகள்


பெரியார்:—'திராவிட நாடு' தனி அரசாக அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பற்றித்தங்கள் கருத்தென்ன?

கோதாவரி மிஸ்ரா :—நியாயமான கோரிக்கையே! அந்தந்த இனம் தங்களின் தனி ஆட்சி கோருவதிலே தவறு என்ன இருக்க முடியும்?

பெரியார்:—காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பதன் நோக்கம் என்ன?

மிஸ்ரா :—அவர்கள் மறுக்காதது எது? எங்கள் கதையைக் கேட்டால் என்ன சொல்வீரோ ?

பெரியார்:—என்ன? என்ன?

மிஸ்ரா :—ஏன் கேட்கிறீர்கள் அந்த வயிற்றெரிச்சலை ! எனக்கும் வார்தாவுக்கும் சண்டை ஏற்பட்ட இரகசியம் என்ன தெரியுமோ? எல்லாம் நீங்கள் கேட்கிறது போல, என் மாகாண மக்களுக்கு நியாயம் வழங்கும்படி கேட்டதுதான்.

பெரியார்:—என்ன கேட்டீர்கள்? ஏன் மறுத்தார்கள் ?

மிஸ்ரா :—விவரத்தைக் கேளுங்கள். ஒரிசா மாகாணம் ஒரியர்களின் இடம். மிக்கஏழ்மையான மாகாணம். புதியது, இதற்கென ஏற்பட்டுள்ள எல்லைக் கோடு சரியல்ல. அதனால் பல தொல்லை. எல்லையைத் திருத்தி அமைத்தால், மாகாணத்தின் செல்வநிலை விருத்தி அடையும்.

பெரியார்:—ஒரிசாவுக்குச் சொந்தமாக ஏதே-

729—2