உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

விடுதலைப் போர்


னும் இடம், இன்னமும் ஒரிசாவில் சேர்க்கப்படவில்லையோ?

மிஸ்ரா : —ஆமாம்! ஜெம்ஷெட்பூர் பிரதேசம் இருக்கிறதே, அது பீகாருக்குச் செல்வமாக இருக்கிறது. ஆனால் அது பெருவாரியாக ஒரியா மக்களே உள்ள இடம், ஒரிசாவுக்கே சொந்தம். அதை பீகாரிலே சேர்த்து விட்டனர். அதை ஒரிசாவிலே சேர்க்க காங்கிரஸ் தீர்மானிக்க வேண்டுமென்று கெஞ்சினேன், வார்தா வரந்தர மறுத்துவிட்டது.

பெரியார் :—ஏன்?

மிஸ்ரா :—ஒருக்காலும் ஜெம்ஷெட்பூர் பிரதேசத்தை, பீகாரிலிருந்து பிரிக்கக் கூடாது என்று பாபு ராஜேந்திர பிரசாத் கூறிவிட்டார். வார்தாவிலே. பீகாருக்கு வருமானம் கெட்டுவிடும். அது பிரசாதுக்குப் பிடிக்கவில்லை. பிரசாதுக்குப் பிடிக்காதது காந்தியாருக்குப் பிடிக்கவில்லை. காந்தியாருக்குப் பிடிக்காதது காங்கிரசுக்குப்பிடிக்குமோ! ஆகவே எனக்கு வரம் இல்லை! இது மட்டுமா? சிட்டகாங் பிரதேசமிருக்கிறதே, அங்கே பெருவாரியான மக்கள் ஒரியாக்கள். ஆகவே அந்த இடமும் ஒரிசாவுடனேதான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்யுங்கள் என்று கேட்டேன். இதையும் மறுத்து விட்டனர்.

பெரியார் :—இதற்கு யார் தடை சொன்னது?

மிஸ்ரா :—சுபாஸ் சந்திரபோஸ் இதைப் பலமாக எதிர்த்தார். சிட்டகாங், வங்காள மாகாணத்திலே இப்போது இருக்கிறது. அதை இழக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அப்போது அவர் காந்-