உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்து அரசுகள்

19


தியாரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவராக இருந்தார். ஆகவே எனக்கு "இல்லை" தான் கிடைத்தது.

பெரியார் :—போசுக்குச் சிட்டகாங் மீது அவ்வளவு ஆசை பிறக்கக் காரணம்?

மிஸ்ரா:- காரணமா? வங்காளத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும், இருக்கும் வீதம் தெரியுமே உங்களுக்கு. முஸ்லீம்கள் மெஜாரட்டி என்றபோதிலும், அதிகமான மெஜாரடியல்ல; 56% முஸ்லீம், 44% இந்து என்ற அளவு இருக்கும். சிட்டகாங் ஒரியாக்கள் வாழும் இடம், இந்துப் பிரதேசம்; இதை வங்கத்திலிருந்து பிரித்துவிட்டால், வங்கத்திலே முஸ்லீம்களே மிக மெஜாரடி! பஞ்சாபிலுள்ளது போன்றாகிவிடும். இந்து ஆதிக்கம் குறையும், எண்ணிக்கையே குறையும். இது சுபாசுக்கு இஷ்டமில்லை. சிட்டகாங் போய்விட்டால், வங்காளத்திலே, இந்துக்களின் ஆதிக்கம் ஏற்படவே முடியாது. வங்காளமோ 'வந்தே மாதரம்' பிறந்த இடம். எனவே வம்புக்கு நிற்கிறது. முஸ்லீமுடன் சச்சரவிடுவதற்காக, இந்து எண்ணிக்கையை அதிகமாகக்காட்ட, சிட்டகாங்கை விட மறுக்கிறார்கள் வங்கஇந்துத் தலைவர்கள்.

பெரியார்:—இப்படியா இருக்கிறது? பிறகு உங்கள் மாகாணத்தின் கதிதான் என்ன?

மிஸ்ரா :—இப்போது பூரி ஜகன்னாதர்தான்! என் கிளர்ச்சி வலுத்து ஒரியர்கள் பெருவாரியாக உள்ள இடம், ஒரிசாவுக்கு என்ற திட்டம் நிறைவேறினால் ஒரிசா மாகாணம் முன்னுக்கு வரமுடியும்.