உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

விடுதலைப் போர்


மிகப்பழய, மிகச்சிறிய மாடிவீட்டிலே, இந்த சம்பாஷணை நடந்தது, சில ஆண்டுகளுக்கு முன்பு. பண்டிட் கோதாவரி மிஸ்ரா, ஒரிசா மாகாண மந்திரியாவதற்கு முன்பு நடந்த உரையாடல். அன்று ஒரிசாவின் நிலைமை விளக்கப்பட்டது போலவே, ஒவ்வோர் மாகாணத்திலும், (சிந்து எல்லைப் புறம் தவிர) இந்தப் பிரிவினைக் கிளர்ச்சி சம்பந்தமாகப் பல நிபுணர்கள் 'இங்கும் இந்த கதிதான்!' என்று முறையிட்டனர்.

பஞ்சாப் ! இங்கு மக்கள் பஞ்சாபிகள். ஆனால் சூத்திரக்கயிறு, வியாபாரம், 'பாம்பேவாலாவிடம்' இருக்கிறது, என்று லாகூரிலே ஒரு பிரபல வியாபாரி கூறினார். அவரும் வெளி மாகாணத்தவரே!

அசாமிலே ஒரு சிமிட்டிக் கம்பெனியின் ஆரம்ப விழா! ஆதை ஆதரிக்கும்படி வெளியிடப்பட்ட அறிக்கையிலே, கம்பெனியின் விசேஷ குணங்களை விளக்கி இருந்தது. கம்பெனியின் திறமையை விளக்குவதைவிட அசாமின் நிலைமை நன்கு விளங்கிற்று அந்த அறிக்கை மூலம்! இந்தக் கம்பெனியின் டைரக்டர்கள் மிக்க திறமைசாலிகள். 5 பேர் வங்காளிகள், 2 ஐரோப்பியர், என்று அறிக்கை தெரிவித்தது. அசாமிய நாட்டு கம்பெனிக்கு வங்க ஐரோப்பிய முதலாளிகள்!

பம்பாயின் ஒரு பகுதி, மத்ய மாகாணத்திலே சில இடங்கள், ஆகியவற்றினைக் கொண்டு விதர்ப்பம் என்ற மாகாணத்தை அமைக்க வேண்டுமென்பது, கனம் ஆனே அவர்களின் கருத்து. அதற்கான கிளர்ச்சியும் இருந்து வருகிறது.