உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்து அரசுகள்

21


பீகாரிலே வெளி மாகாணத்தாரின் ஆதிக்கத்தையும், உயர்ந்த ஜாதிக்காரர் என்போரின் ஆளுகையையும் ஒழித்து பீகாரின் பூர்வ குடிகளுக்கு உரிமை ஏற்படுத்தி, பீகாரிலே அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆதிபாசி இயக்கம் இருக்கிறது. (ஆதிவாசி— பூர்வ குடிகள், என்பதுதான் ஆதிபாசி என்பது). இதனைப் பக்குவமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

நாட்டிலே இன்றுள்ள உணர்ச்சியை, நாட்டின் பெரிய கட்சி என்று பாத்யதை கொண்டாடும் காங்கிரஸ், மறைக்கப் பார்க்கிறது என்ற போதிலும், பிரிவினை, உரிமை, எனும் எண்ணம், எங்கும் தோன்றிவிட்டது. 'திராவிட நாடு' தனிநாடாக வேண்டுமென்ற நமது கிளர்ச்சி, இதிலே ஒரு பகுதி. சர் பிரேஸ்கான் நூன், அலிகார் பல்கலைக் கழக மாணவர் கூட்டத்திலே பேசுகையில் இந்தியா,

1. எல்லைப்புறம், பலுசிஸ்தானம், பஞ்சாப்
2. வங்காளம், அசாம்
3. ம. மாகாணம், ஐக்கியமாகாணம்
4. பம்பாய்
5. திராவிட நாடு (சென்னை)

என ஐந்து அரசுகளாகப் பிரித்து அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். வெளி நாட்டுப் படை எடுப்பு ஏற்பட்டால் என்ன செய்வதென்று பேசுவோரின் வாயை அடக்கவும் வழியொன்று கூறியுள்ளார். இந்த ஐந்து அரசுகளும் அனுப்பும் பிரதிநிதிகள் கொண்ட மத்ய சர்க்கார், பாதுகாப்பு, நாணய-