உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

விடுதலைப் போர்


வாரி முறை ஆகியவற்றை நடத்தி வரலாமென்றும் கூறியிருக்கிறார்.

நியூஜிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகியவைகள் தனி அரசுகளாக இருத்தல் சாத்யமாகிறதே, இங்கு, ஐந்து அரசுகள் ஏற்படுவதிலே என்ன தவறு இருக்க முடியும் என்றும் கேட்டிருக்கிறார். ஐம்பத்தாறு அரசுகள் இருந்தனவாம் இந்து ஆட்சிக்காலத்திலே. புராண இதிகாசாதிகளும் ஆரம்பகால சரிதைகளும் இதனை வலியுறுத்துகின்றன. ஐம்பத்தாறு அரசுகள் கொண்ட பூபாகத்திலே இன்று சர் நூன் கூறும் விதமான ஐந்து அரசுகளுங்கூட இருக்க இந்து தலைவர்கள் சம்மதிக் காதது விந்தைதான் ! இதற்குக் காரணம் முன்னாளிலே இந்த ஐம்பத்தாறு அரசுகளும், ஆரியக்கூடங்கள்! ஆகவே அந்தநிலை பாரத மாதாவை வெட்டுவதாகத் தோன்றவில்லை! இப்போது தனி அரசுகள் ஏற்பட்டால், ஆரிய ஆதிக்கம் அழிந்தொழியும். எனவேதான், இன்று, தனி அரசுகள் அமையக்கூடாதென்று ஆர்ப்பரிக்கின்றனர்.

எவ்வளவு கடுமையான கூக்குரலைக் கிளப்பினாலுஞ்சரியே, இந்தப்பிரிவினைக் கிளர்ச்சி அடங்காது. வேரூன்றி விட்டது. முறைகள், திட்டங்கள் பலப் பல வெளியிடப்படக்கூடும். சர் நூன் கூறிய மத்யசர்க்கார் என்பதை, இந்திய நேசநாடுகளின் கூட்டுப் பாதுகாப்புக் கழகம் என்ற அளவில் மட்டுமே நாம் ஏற்றுக் கொள்கிறோம். திட்டங்களிலே பல விதம் விவாதிக்கப்படுவது சகஜமே. ஆனால் அடிப்படையான கோட்பாடு இனி மாய்க்க முடியாததாகிவிட்ட-