உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

விடுதலைப் போர்


வழக்கமாகக் கூடி வசீகரமாகப் பேசி, வளையாது குனியாது வாய்வீரம் காட்டிவிட்டு, வாகை சூடியதாக மனப்பால் குடித்துவிட்டுத் தோகையர் புடைசூழப் போகபூமிக்குச் செல்லும் சுகபோகிகளின் கூட்டம் அல்ல! வறுமையின் இயல்பைத் தெரிந்தவர்களின் கூட்டம்! பசியும் பட்டினியும் எப்படி இருக்கும் என்பதை அறிந்தவர்கள்!! பாட்டாளிகள், ஆனால் பார்ப்பனியத்தின் பாதத்தைத் தாங்கும் ஏமாளிகளல்ல; அந்தப் பார்ப்பனியத்தை மத சமுதாயத் துறைகளிலே முறியடிக்காமலேயே பட்டத்தரசராகிவிட முடியும் என்று கருதும் கோமாளிகளல்ல; ஊருக்கு உழைத்து உருமாறிக்கிடக்கும் உத்தமர்கள் கூடினர் அன்று. உறுதியை வெளிப்படுத்தினர், ஊராள்வோரின் உளமும் உணரும் விதத்திலே. பட்டம் பதவிக்காகவே கொட்டாவி விட்டுக்கிடக்கும் காட்சி என்றிருந்த பழிச்சொல்லை அன்று துடைத்தனர், மணிமீது. கிடந்த மாசு துடைக்கப்பட்டது, ஒளி வெளிவரத்தொடங்கிவிட்டது. பட்டம் ஏன் ? பதவி ஏன்? பரங்கியும் பார்ப்பனனும் பார்த்தா, பாராண்ட தமிழனுக்குப் பட்டம் சூட்டவேண்டும்? கடல் கடந்தவன் தமிழன் இமயத்தில் புலி பொறித்தவன் தமிழன்! கடாரத்தைக் கொண்டவன் தமிழன்! ரோம்நகருக்குப் பொன்னாடை விற்றவன் தமிழன்! இலக்கியச் சுவையைக் கண்டவன் தமிழன்! எந்நாடும் வியக்கும் வீரன் தமிழன்! ஏறுநடையுடையான் தமிழன்! இன்னல்கண்டும் புன்னகைபுரிவான் தமிழன்! அவனுக்குப் பட்டம், சோப்பும் சீப்பும்