உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போர், முதற்பதிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிடர் கழகம்

25


ரைத் தாங்குவதா, என்ற தீ உள்ளே கொழுந்துவிட்டெரியும் கோலத்துடன் கூடிய அந்த வீரர்கள் விரும்புவது, உரிமை ! ஆம் ! திராவிடநாடு திராவிடருக்கே என்ற உரிமையைத்தான் அவர்கள் விரும்புகின்றனர். அந்தக் கண்கள் காட்டிய ஒளி, அவர்கள் அன்று கிளப்பிய ஒலி, தோள் தட்டி மார்பு நிமிர்த்தி அணிவகுத்துகின்றகாட்சி, ஒரு இனத்தின் எழுச்சியின் அறிகுறியாக, விடுதலைப் படையின் எக்காளமாக, மூலத்தை உணர்ந்தோரின் முழக்கமாக, இருந்ததேயன்றி, காருண்யமுள்ள சர்க்காருக்கு வாழ்த்துக்கூறிக், கனதனவான்களுக்கு நமஸ்காரம் செலுத்திச், சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் சேதிகூறிடும் சிங்காரக்கூட்டமாக இல்லை. இதனை நாடு அறிதல் வேண்டும், நாமும் மனத்திலே பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

ஆளும் கூட்டத்தாரால் அலட்சியப் படுத்தப்பட்டு, மாற்றுக் கட்சிகளால் கேலி செய்யப்பட்டு, ஆரியர்களால் அவமதிக்கப்பட்டு, வட நாட்டவரால் வாட்டப் பட்டு, மண் இழந்து மானம் இழந்து, பொருளைப் பறிகொடுத்து மருளைத் துணைக்கழைத்து, மார்க்கமின்றி மதையாளரிடம் மண்டியிட்டுக்கிடக்கும் ஒரு இனம், அன்று, விடுதலை பெற்றுத்தீரவேண்டும், அதற்காக நான் உழைப்பேன் ! உயிர் அளிப்பேன்! இடையே இன்பம் என்ற பெயரிலே எது வரினுங்கூட மயங்கிடேன் ! போரிடுவேன் ! பெற்றால் வெற்றிமாலை, இல்லையேல் சாவு ஓலை! என்று பெரியதோர் சூள் உரைத்த சூரர்கள் கூட்டம் அது.